பிரித்தானியா சென்ற சிறிலங்கா இராணுவ அதிகாரியிடம் போர்க்குற்றங்கள் குறித்து விசாரணை?

சிறிலங்கா இராணுவ அதிகாரி ஒருவரிடம் போர்க்குற்றங்கள் தொடர்பாக பிரித்தானியா விசாரணை நடத்தியிருப்பதாக சிங்கள நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

பிரித்தானியாவுக்குப் பயணம் மேற்கொண்ட சிறிலங்கா இராணுவ அதிகாரி ஒருவரிடமே, போர்க்குற்றச்சாட்டுகள் தொடர்பாக கேள்விகள் எழுப்பப்பட்டு விசாரணை நடத்தப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.

எனினும், எப்போது இந்த விசாரணை நடத்தப்பட்டது, விசாரணைக்குள்ளாக்கப்பட்ட சிறிலங்கா இராணுவ அதிகாரி யார் என்ற விபரங்கள் எதையும் சிங்கள நாளிதழ் வெளியிடவில்லை.

புலம்பெயர் தமிழர்களின் கோரிக்கைக்கு அமையவே பிரித்தானியா இந்த விசாரணையை நடத்தியிருப்பதாக அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.

-puthinappalakai.net

TAGS: