சுற்றுலா, பண்பாட்டு அமைச்சர் நஸ்ரி அசிசை எதிர்க்கட்சிகளின் கூட்டுச் சதிகாரர் என்று மசீச தலைவர் லியோ தியோங் லாய் அடையாளப்படுத்தியுள்ளார்.
“இன்று மசீச, வலிமைவாய்ந்ததாகக் காணப்படும் எதிர்க்கட்சிகளை மட்டுமல்லாமல் பிஎன்னில் இருக்கும் ‘கூட்டுச்சதிகாரர்களையும்’ எதிர்கொள்ள வேண்டியுள்ளது.
“நான் குறிப்பிடும் ‘எதிர்க்கட்சிகளுடன் இணைந்து பணியாற்றும் கூட்டுச் சதிகாரர்’ யார் என்பதை அனைவரும் அறிவர்.
“அவர்தான் (கோடீஸ்வரர்) ரோபர்ட் குவாக்மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை அள்ளிவீசும் சுற்றுலா அமைச்சர்”, என லியோ இன்று கோலாலும்பூரில் கட்சித் தலைமையகத்தில் மசீசவின் 69ஆம் ஆண்டு விழாவில் பேசியபோது குறிப்பிட்டார்.
“நஸ்ரி எதிர்க்கட்சிகளின் கூட்டுச்சதிகாரர்” என்கிறார் அமைச்சர். அட எங்களே நிறைய காமிடி பீசு இருக்கையிலே , அங்கிருந்து புதுசா ஒருத்தரு வேணுமா ?