இரண்டாவது சுற்று விசாரணைக்காக எம்ஏசிசி-இல் நஜிப்

முன்னாள்   பிரதமர்    நஜிப்    அப்துல்    ரசாக்,  எஸ்ஆர்சி  இண்டர்நேசனல்மீதான   விசாரணைக்காக  இன்று  காலை  மணி   9.45க்கு   மலேசிய   ஊழல்தடுப்பு   ஆணைய    தலைமையகம்   வந்தார்.

இன்று  நடப்பது  இரண்டாவது  சுற்று  விசாரணை.  தொடக்க     விசாரணை    செவ்வாய்க்கிழமை    நடைபெற்றது.  சுமார்   ஐந்து   மணி   நேரம்   நஜிப்   துருவித்   துருவி   விசாரிக்கப்பட்டார்.

அவ்விசாரணை   2015-இல்   நடத்தப்பட்ட விசாரணையின்    தொடர்ச்சியாகவும்    அதே   நேரத்தில்     விரிவானதாகவும்     அமைந்திருந்ததாக    நஜிப்   குறிப்பிட்டார்.

எஸ்ஆர்சி  இண்டர்நேசனல்   என்பது   1எம்டிபி-இன்  துணை   நிறுவனம்,  2012-இல்   அது   நிதி    அமைச்சின்கீழ்   வந்தது.   எஸ்ஆர்சி  பணம்   ரிம42மில்லியன்  நஜிப்பின்   வங்கிக்  கணக்குக்கு   மாற்றப்ப்பட்டதாகக்  கூறப்படுகிறது. அது  குறித்துத்தான்   இந்த  விசாரணை.