ஒட்டுசுட்டான் கிளைமோர்தாரிகளுக்கு சுவிஸிலிருந்து பணம்

ஒட்டுசுட்டானில் கிளைமோர், விடுதலைப் புலிகள் அமைப்பின் சீருடை, புலிக்கொடி என்பவையுடன் முச்சக்கர வண்டி ஒன்று கைப்பற்றப்பட்ட சம்பவத்தில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களுடன் தொடர்புடைய ஒருவர் தலைமறைவாகியுள்ளார். அவரைத் தேடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன என்று பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபர்களில் ஒருவரின் வங்கிக் கணக்குக்கு சுவிஸிலிருந்து தொடர்ச்சியாக பணம் அனுப்பப்பட்டு வந்துள்ளது. அவர் கொள்வனவு செய்யும் வாகனங்களை தலைமறைவாகியுள்ள சந்தேகநபரின் பெயரிலேயே பதிவு செய்துள்ளார் என்பது விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் உள்பட 5 சந்தேகநபர்கள் பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் விசாரணக்குட்படுத்தப்பட்டுள்ளனர்.

தலைமறைவாகி உள்ளவர் தொடர்பில் அவரது சகோதரியிடம் விசாரணை நடத்தப்பட்டது. மோட்டார் சைக்கிள் கொள்வனவு செய்வதற்குரிய வசதி சகோதரனுக்கு இல்லை என தெரிவித்தார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

-tamilcnn.lk

TAGS: