யாழில் மீண்டும் துப்பாக்கிச் சூடு;ஒருவர் பலி..

யாழ் மல்லாகத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் துப்பாக்கிச் சூட்டிற்கு உள்ளாகி உயரிழந்துள்ளார்.

மல்லாகம் சந்தியிலுள்ள காங்கேசன்துறை உதவி பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்தில் காவல் கடமையிலிருந்த பொலிஸ் உத்தியோகர் ஒருவர் இன்று துப்பாக்கிச்சூட்டு காயத்துடன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

தெல்லிப்பளை பொலிஸ் பிரிவில் சார்ஜனாக கடமையாற்றும் 25 வயதுடைய என்.நஸீர் என்னும் திருகோணமலை மாவட்டத்தை சேர்ந்த பொலிஸ் உத்தியோகத்தரே இவ்வாறு துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.

எனினும் துப்பாக்கிச்சூட்டு சம்பவம் எவ்வாறு இடம்பெற்றது என்பது தொடர்பில் விபரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை.

சடலம் மீட்கப்பட்ட இடத்திலிருந்து அவரது ஏகே47 ரக துப்பாக்கி மீட்கப்பட்டுள்ளதுடன் சடலம் தற்போது தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

-athirvu.in

TAGS: