விடுதலைப் புலிகள் அணியில் இருந்து கருணாவை மிக மிக சாதூரியமாக பிரித்த ரணில், தற்போது விஜயகலாவை வைத்து புது ஆட்டம் ஒன்றை ஆட ஆரம்பித்துள்ளார். யாழில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில், விடுதலைப் புலிகள் மீண்டும் உருவாகவேண்டும் என்று, சிங்கள ஊடகவியலாளர்கள் முன்னால் பேசியுள்ளார் விஜயகலா. இதனை சிங்கள ஊடகங்கள் அப்படியே பிரசுரிக்கும் என்பது இவர்கள் நன்கு அறிந்த விடையம். இதனால் சிங்களவர் மத்தியில் கொந்தளிப்பு ஒன்றை ஏற்படுத்தி.
அதனூடாக விஜயகலாவை தமிழர்கள் மத்தியில் பெரும் தலைவியாக உயர்த்த ரணில் திட்டம் தீட்டியுள்ளார். அந்த நாடகமே தற்போது நடத்தப்பட்டு வருகிறது. சொல்லி வைத்தால் போல, தமிழர்களின் தலைவி விஜயகலா என்ற போஸ்டர்களும் யாழில் அடித்து ஒட்டப்பட்டுள்ளதோடு. ஐக்கிய தேசிய கட்சிக்கான ஆதரவும் யாழில் பெருகி வருகிறது. இதனூடாக தமிழ் தேசிய கூட்டமைப்பை உடைப்பது. இதர தமிழ் கட்சிகளையும் பலமிழக்கச் செய்வதும் ரணிலின் திட்டங்களில் ஒன்று.
இவர்கள் உட்கார்ந்த இடத்திலேயே இருந்துகொண்டு 70MM சினிமா பயாஸ்கோப் காட்ட தமிழர்கள் அனைவரும் இதனை பார்க்கிறார்கள். இது தான் இன்றைய நிலை.
-athirvu.in