கொழும்பு – செட்டியார் தெருவில் இன்று காலை இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகத்தில் கொழும்பு நகர சபையின் உறுப்பினரும் நவோதய மக்கள் முன்னணியின் தலைவருமான எஸ்.கே.கிருஷ்ணா உயிரிழந்துள்ளார்.
கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மோட்டார் சைக்கிளில் பயணித்த நபர் ஒருவர் இவ்வாறு துப்பாக்கி பிரயோகத்தினை மேற்கொண்டு தப்பிச் சென்றுள்ளார்.
சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
நவோதய மக்கள் முன்னணியின் தலைவர் எஸ்.கே. கிருஷ்ணா, கடந்த சில வாரங்களுக்கு முன்னர், அரசியல் கைதி ஆனந்த சுதாகரனது பிள்ளைகளின் கல்வி செலவை தானே ஏற்றுக்கொண்டதோடு தமிழ் மக்களுக்காக குரல் கொடுத்த ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதேவேளை கொழும்பு – கொட்டாஞ்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஜம்பட்டா வீதியில் நேற்றிரவு 8.10 மணியளவில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் இருவர் காயமடைந்துள்ளனர்.
துப்பாக்கி பிரயோகத்தில் காயமடைந்த நால்வரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அதில் இருவர் உயிரிழந்திருந்தனர்.
குறித்த துப்பாக்கிச்சூட்டு சம்பவங்கள் தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
-athirvu.in