ஈழத் தமிழர்களின் போராட்ட வரலாற்று ஆவணங்களை, மெதுவாக அழித்து வருகிறது யூ-ரியூப் என்பது பலருக்கு தெரியாது. இது இவ்வாறு இருக்க தமிழ் நாட்டில் மட்டும் சுமார் 2 கோடி பேர் தமது முக நூல்(பேஸ்புக்கின்) படமாக தேசிய தலைவர் பிரபாகரன் அவர்களின் புகைப்படத்தையே வைத்திருக்கிறார்கள் என்ற விடையதை இந்திய புலனாய்வு துறை கண்டறிந்துள்ளது. இதனை அடுத்து இவர்கள் கொடுத்த தகவலை வைத்து இலங்கை அரசின் புலனாய்வுத் துறையின் நடத்திய சோதனையில், இலங்கையிலும் ஆயிரக்கணக்காணவர்கள் தலைவர் பிரபாகரன் அவர்களின் புகைப்படத்தை தமது புகைப்படமாக போட்டுள்ளார்கள்.
இதன் காரணத்தால் இலங்கை மற்றும் இந்திய தேசிய புலனாய்வு நிறுவனங்கள் இணைந்து, பேஸ் புக் நிறுவனத்திற்கு கூட்டாக ஒரு கோரிக்கையை விடுத்துள்ளது. அது என்னவென்றால், பிரபாகரனின் படத்தை பயங்கரவாதியின் படமாக அறிவித்து. அதனை நீக்கவேண்டும் என்பது தான். இதனை ஒருவகையில் பேஸ்புக் நிறுவனம் ஏற்றுக்கொண்டுள்ளது என அறியப்படுகிறது. ஆனால் முழுமையாக இதனை இன்னும் நடைமுறைப் படுத்த வில்லை. இன் நிலையில் உலகில் வாழும் அனைத்து தமிழர்களும் இதற்கு எதிராக போர் கொடி தூக்கி வருகிறார்கள். சிலவேளைகளில் நீங்கள் தலைவரது படத்தை அல்லது புலிகள் சின்னம் அடங்கிய புகைப்படத்தை பேஸ்புக்கில் பதிவிட்டால்.
அதனை கமியூனிட்டி ஸ்டான்டட்() ஏற்புடையதாக இல்லை எனவே நீக்கிறோம் என்ற செய்தி வரும். அங்கே நீங்கள் அந்த முடிவை எதிர்த்து உங்கள் கருத்தை முன்வைக்கலாம். இல்லையென்றால் அவர்கள் எடுத்த முடிவை ஆமோதிக்கலாம். அப்படி ஒரு நிலை வந்தால் ஆமோதிக்கவேண்டாம். எதிர்த்து உங்கள் கருத்தை எழுதுங்கள். இது எமது உரிமை. இவர்கள் விடுதலைப் புலிகளை பயங்கரவாதிகளாக சித்தரிக்க முயலவில்லை. ஒட்டு மொத்த தமிழர்களையுமே பயங்கரவாதிகள் ஆக்க பார்கிறார்கள். எமது போராட்ட வரலாற்றை மெதுவாக அழித்து. இப்படி ஒரு போராட்டம் நடந்ததை மெதுவாக வரலாற்றில் இருந்தே அழிக்கப் பார்க்கிறார்கள்.
லண்டன் தலைநகரில் குண்டுவைத்து, மக்களை கொன்று குவித்த ஐ.ஆர்.ஏ தற்போது அரசியல் கட்சியாக மாறியுள்ளது. அதன் அன்றைய தலைவர்கள் அரசியல் கட்சி பிரமுகர்களாக வலம் வருகிறார்கள். அவர்கள் பேஸ் புக் பக்கங்கள் முடக்கப்படவில்லை. ஆனால் லண்டனில் குண்டு எதனையும் புலிகள் வைக்கவில்லை. அவர்கள் ஐரோப்பாவில் எதனையும் செய்யவில்லை, ஆனால் அவர்களுக்கு தடை. பயங்கரவாதிகள் என்ற பெயர். தற்போது உலகளாவிய ரீதியில் பேஸ்புக்கிலும் தடை. இவை அனைத்தும் நன்கு திட்டமிடப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. இலங்கை அரசு இந்த விடையத்தில் அதிக நேரத்தை செலவு செய்து. முஸ்லீம் ஜிகாடிகள் வளர்ந்ததை காண கோட்டை விட்டது. இன்று நாம் இதனை சரிசெய்யவில்லை என்றால், நாளை நாம் சரித்திரமற்றவர்களாக இருக்கும் நிலை தோன்றலாம். 44,000 போராளிகள் 1லட்சத்திற்கும் மேற்பட்ட எமது உறவுகள் இறந்து போனது யாருக்கும் தெரியாமலே போய்விடும்.
-athirvu.in