இலங்கையில் முஸ்லீம் தீவிரவாதிகள் கொடூர தாக்குதல்; பின்னணியில் சவூதி: வெளியான அதிர்ச்சி தகவல்!

சவுதி அரேபிய உளவுத்துறையே சிறிலங்காவில் இஸ்லாமிய அடிப்படைவாதத்தை தூண்டி இஸ்லாமிய தீவிரவாதத்தை கட்டியெழுப்பியுள்ளதாக சிறிலங்காவின் சிங்கள பௌத்த பேரினவாத அமைப்பான பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானாசார தேரர் பகிரங்கமாக குற்றம்சாட்டியுள்ளார்.

அதேவேளை இந்த தீவிரவாதத்துக்கு சிறிலங்காவைச் சேர்ந்த முன்னணி முஸ்லிம் வர்த்தகர்களும், கல்வி மான்களும் துணை போவதாகவும் பாரதூரமான குற்றச்சாட்டை முன்வைத்துள்ள ஞானாசார தேரர், அவர்கள் அனைவரையும் கைதுசெய்ய வேண்டும் என்று சிறிலங்கா அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளார்.

நீதிமன்றத்தை அவமதித்த குற்றத்துக்காக 19 வருடகால கடூழிய சிறைத் தண்டனையை ஆறு வருடங்கள் அனுபவித்து முடிக்கும் வகையில் மேன்முறையீட்டு நீதிமன்றால் தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் வெறும் ஆறு மாதங்களே சிறைவாசத்தை அனுபவித்த பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானாசார தேரர் கடந்த வாரம் சிறிலங்கா ஜனாதிபதியால் பொது மன்னிப்பு வழங்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டார்.

விடுதலையான அவர், தான் மிகவும் களைப்படைந்துவிட்டதாகவும், அதனால் தான் இனிமேல் துறவு வாழ்க் கையில் முழுமையாக ஈடுபடப் போவதாகவும் அறிவித்தார்.

எனினும் இந்த அறிவிப்பை விடுத்து ஒருசில மணி நேரங்களில் பொதுபல சேனா அமைப்பின் பௌத்த பிக்குகள் மற்றும் ஆதரவாளர்களை சந்தித்த போது, இளம்சந்ததியினரின் கோரிக்கைக்கு அமைய தான் மீண்டும் இதுவரை காலமும், நாட்டினதும், சிங்கள பௌத்த இனத்தினதும் பாதுகாப்புக்காக மேற்கொண்டுவந்த பணியை தொடரப் போவதாக அறிவித்தார்.

இந்த நிலையில் இன்றைய தினம் கொழும்பிலுள்ள பொதுபல சேனா அமைப்பின் அலுவலகத்தில் ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்திய ஞானாசார தேரர், இஸ்லாமிய கடும்போக்குவாதமான வஹாப் வாதத்தை பரப்பிவரும் சவுதி அரேபியாவே சிறிலங்காவிலும் பெருந்தொகை நிதியை ஒதுக்கி இஸ்லாமிய அடிப்படைவாத தீவிரவாத த்தை கட்டியெழுப்பி வருவதாக குற்றம்சாட்டினார்.

இது தொடர்பில் அவர் தெரிவிக்கையில் ‘இதுவரை காலமும் சிறிய மீன்களே பிடிபட்டன. எனினும் இப்போதி லிருந்து சுறா உட்பட பெரிய மீன்களைப் பிடிப்பதற்கு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கின்றோம். இதன் பாரதூரமான நிலை குறித்து விளக்கமளிக்கின்றேன். சவுதி அரேபிய உளவுத்துறை முகவர்கள் ஸ்ரீலங்காவில் வஹாப்வாதத்தை கட்டியெழுப்புவதற்காக புறம்பான வேலைத்திட்டங்களை மேற்கொள்கின்றனர். அதற்காக ஒரு தலைவரை அல்ல பல தலைவர்களை உருவாக்குவதே அவர்களது பிரதான இலக்காக இருக்கின்றது. 50 தலை வர்கள் தலைமையில் அதாவது இப்போது பிரிந்திருக்கின்ற என்.டிஜே, எஸ்.எல்.டி.ஜே, யு.டி.ஜே போன்ற 50 அமைப் புக்களை உருவாக்குவதே இலக்காகும். அது ஒரு நோக்கம். மற்றைய இலக்குதான் கல்வியாளர்களை உருவா க்குவது. அதனையே இப்போது அம்பலப்படுத்துகின்றேன்.

சரியாக இரண்டு மாதங்களுக்கு கடினமாக முயற்சித்தால் அவர்களையும் கைது செய்துவிட முடியும்”.

சிறிலங்கா தலைநகர் கொழும்பில் இயங்கும் முன்னணி தனியார் கல்வி நிறுவனங்களில் ஒன்றான முஸ்லிம் இனத்தவர் ஒருவருக்கு சொந்தமான பீகாஸ் நிறுவனத்தின் ஊடாகவே இஸ்லாமிய அடிப்படைவாத தீவிரவாதிகள் உருவாக்கப்படுவதாகவும் ஞர்னாசார தேரர் பாரதூரமான குற்றச்சாட்டை முன்வைத்து, பீகாஸ் நிறுவனத்தின் உரிமையாளர் மீதும் குற்றச்சாட்டுக்களை முன்வைத்தார்.

“வஹாப்வாதத் தலைவர்கள் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், சோமாலியா போன்ற நாடுகளில் உருவாக்கப்படு கிறார்கள் என்றுதான் நாங்கள் இதுவரை நினைத்திருந்தோம். ஆனால் பீகாஸ் என்ற வெளிநாட்டுப் பட்டப்படிப்பு நிறுவனத்தின் ஊடாக 200 பேர் பிரித்தானியா மற்றும் அவுஸ்திரேலியாவுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர். அபிவிருத்தி அடைந்த நாடுகளிலிருந்தே பயிற்சிகள் அளிக்கப்பட்டு இவர்கள் மீள அனுப்பப்படுகின்றனர். அப்போது சந்தேகம் வராது. யார் இந்த நபர்கள்? பேச்சுக்கள் இன்றி இவர்கள் கைது செய்யப்பட வேண்டும்.

அப்துல் ரஹ்மான் என்கிற பீகாஸ் பட்டப்படிப்பு தனியார் நிறுவனத்தின் உரிமையாளர், தற்கொலைதாரி சஹ்ரா னுடன் இருப்பது குறித்த புகைப்படமே இது. இவருக்கு கட்டார் உட்பட பல நாடுகளில் விடுதிகள், சொந்தக் கட்டடங்கள் உள்ளன. நல்லாட்சிக்கான முன்னணி என்கிற கட்சியொன்றை இவர்கள் உருவாக்கியிருந்தார்கள். அதனை தடைசெய்யும்படி தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் கேட்கின்றோம். உடனடியாக அப்துல் ரஹ்மானை கைது செய்யும்படி பொலிஸ்மா அதிபர் உட்பட அரசியல்வாதிகளிடமும் கேட்கின்றோம். நாட்டைவிட்டுத் தப்பிச் செல்லும் முன்னர் இவர்களை கைது செய்யுங்கள் என்றார்.

-athirvu.in

TAGS: