முழுத் தவணைக்கும் மகாதிர் பிரதமராக இருப்பது அவசியம்- அஸ்மின்

பொருளாதார அமைச்சர் அஸ்மின் அலி, பாஸ் கட்சித் தலைவர் அப்துல் ஹாடி ஆவாங் பாஸும் அம்னோவும் மகாதிர் முழுத் தவணைக்கும் பிரதமராக இருப்பதை ஆதரிக்கும் என்று கூறியிருப்பதை வரவேற்றார்.

தேசிய சீரமைப்புகளைச் செய்யவும் பொருளாதாரத்தை மீட்சியுறச் செய்வதற்காகவும் டாக்டர் மகாதிர் முகம்மட் முழுத் தவணைக்கும் பிரதமராக இருத்தல் அவசியம் என்றாரவர்.

“பிரதமருக்கு ஆளும் கட்சி- எதிர்கட்சி ஆதரவு என்பது மலேசிய அரசியலில் ஒரு புதிய அத்தியாயத்தைக் குறிக்கிறது.இங்கு மக்கள் நலனுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது.

“வாக்களிப்பு வயதை 18க்குக் குறைக்க அரசமைப்பில் திருத்தம் கொண்டுவரப்பட்டபோதே அது வெளிப்பட்டது.

“இந்த இருகட்சி ஆதரவு மகாதிர் தலைமையின்மீதுள்ள நம்பிக்கையைக் காட்டுகிறது”, என அஸ்மின் குறிப்பிட்டார்.