எம்40 உள்ளிட்ட அனைவருக்கும் பொது சிறப்பு உதவி – பிரதமர் அறிவிப்பு

மக்கள் பாதுகாப்பு மற்றும் பொருளாதார மீட்பு தொகுப்பு (பெமுலே) என அழைக்கப்படும் புதிய தூண்டுதல் தொகுப்பின் கீழ், கோவிட் -19 சிறப்பு உதவிக்கு (பி.கே.சி.) RM4.6 பில்லியன் ஒதுக்கீடு செய்வதாகப் பிரதமர் முஹைதீன் யாசின் அறிவித்தார்.

முஹைதீன் தனது உரையில், மே 31 அன்று அறிவிக்கப்பட்ட RM4.9 பில்லியனின் கூடுதல் ஒதுக்கீட்டிற்குக் கூடுதலாக, இது நாளை, ஜூன் 29 முதல் கட்டங்கட்டமாக செலுத்தப்படும் என்று கூறினார்.

“கடந்த பெமெர்காசா பிளஸ் அறிவிப்பின் போது, ​​ஜூலை மாதத்தில், பிபிஆர்-க்கு 500 ரிங்கிட் வரை கூடுதல் நிதி செலுத்த அரசாங்கம் ஒப்புக் கொண்டது, அந்த நிதியும், நாளை, ஜூன் 29 முதல் கட்டங்கட்டமாகச் செலுத்தப்படும்.

“2021-ஆம் ஆண்டின் இறுதி வரையில், மக்கள் உதவி பெறுவதை உறுதி செய்வதற்காக, பின்வரும் விகிதங்கள் மற்றும் வகைகளுடன் கோவிட் -19 அல்லது பி.கே.சி. சிறப்பு உதவி வழங்குவதை அறிவிப்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்:

  • மிகவும் ஏழை குடும்பங்களுக்கு, ஆகஸ்ட் மாதத்தில் RM500, நவம்பரில் RM500 மற்றும் டிசம்பரில் RM300 உதவிகள் கிடைக்கும்.
  • மிகவும் ஏழை பிரிவில் உள்ள, தனிநபர்கள் ஆகஸ்ட் மாதத்தில் RM200 மற்றும் நவம்பரில் RM300 உதவியைப் பெறுவார்கள்
  • பி40 குழு குடும்பங்கள், ஆகஸ்டில் RM500 மற்றும் டிசம்பரில் RM300 உதவி பெறுவர்.
  • பி40 பிரிவில் உள்ள தனிநபர்கள் ஆகஸ்ட் மாதத்தில் RM200 உதவியைப் பெறுவார்கள்
  • எம்40 பிரிவு குடும்பங்கள் RM250 உதவியும், எம்40 பிரிவு தனிநபர்கள் RM100-ஐயும் ஆகஸ்ட் மாதத்தில் பெறுவார்கள்.

“மொத்தத்தில், இந்தச் சிறப்பு பி.கே.சி. மானியம் 11 மில்லியனுக்கும் அதிகமான குடும்பங்கள், தனிநபர்கள் மற்றும் மூத்த குடிமக்கள் ஆகியோருக்குப் பயனளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது,” என்று முஹைதீன் கூறினார்.