நாடு முடக்கப்பட்டுள்ள நேரத்தில் வீதிகளில் பெரும் எண்ணிக்கையிலான மக்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த விடயத்தை நாடாளுமன்ற உறுப்பினர் அசோக அபேசிங்க தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில்,தொழிற்சங்கம் நாட்டை மூடும்படி கேட்டுக் கொண்ட நேரத்தில் நாட்டை மூடவில்லை. இப்போது மூடியுள்ளனர்.ஆனால் அது வெற்றியளிக்கவில்லை. தற்போது வீதிகளில் பெரும் எண்ணிக்கையிலான மக்கள் இருக்கின்றனர்.
உலகில் மிகவும் பின்தங்கிய ஐந்து நாடுகளில் ஒன்றென இலங்கையும் வந்து விட்டது.வீழ்ச்சியடைந்து வரும் நாடுகளில் நான்காவது இடத்தில் இலங்கை உள்ளது என குறிப்பிட்டுள்ளார்.
(நன்றி TAMILWIN)