இலங்கை விமான நிலையங்களில் இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் நடவடிக்கை!

இலங்கையில் உள்ள சர்வதேச விமான நிலையங்களில் இன்று நள்ளிரவு முதல் வெளிநாட்டு மற்றும் உள்ளூர் பயணிகளுக்கான பிசிஆர் வழிகாட்டுதல்கள் அமுலாகும் என சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல (Keheliya Rambukwella) தெரிவித்துள்ளார்.

இதேவேளை நாட்டிற்குள் நுழையும் முன்னர் அல்லது புறப்படும் நேரத்தில் பிசிஆர் பரிசோதனை முடிவு தவறாக இருந்தால் விமான நிலையத்தில் மற்றொரு பிசிஆர் பரிசோதனை செய்ய தேவையில்லை என்றும் பயணிகள் வெளியேற அனுமதிக்கப்படுவர் என்றும் சுகாதார அமைச்சு தகவல் வெளியிட்டுள்ளது.

தடுப்பூசியை முழுமையாகப் பெற்றுக் கொண்ட பயணிகள் ஒக்டோபர் முதலாம் திகதியிலிருந்து இலங்கையை வந்தடைந்த பின்னர் மேற்குறிப்பிட்ட நடைமுறை பின்பற்றப்படும் என்றும் அமைச்சு அறிவித்திருந்த நிலையிலேயே, இன்று நள்ளிரவு முதல் இவ்வழிகாட்டல் அமுல்படுத்தப்படும் என்று அமைச்சர் கெஹெலிய அறிவித்துள்ளார்.

(நன்றி JVP NEWS)