ஊழலை ஒடுக்க செல்வாக்கு மிக்கவர்கள் தடையா?- அன்வார்

ஊழலை ஒடுக்குவதற்குச் செல்வாக்கு மிக்கவர்கள் தடையாக இருக்கின்றனர் என்கிறார் எதிர்க்கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம். இதற்கு முன்னால் இவர்களுக்கு உடந்தையாக செயல்பட்டவர்களில் முன்னாள் பிரதமரும் அடங்குவார் என்கிறார் அன்வார்.

இதுபோன்ற அரசியல் சூழ்நிலையில் நாம் எதையும் குறைவாக மதிப்பிட இயலாது. “செல்வாக்கும் ஆதிக்கமும் கொண்டவர்கள் உண்மையான நாட்டின் சீரமைப்புக்கு ஆதரவாகச் செயல்படுவதில்லை”, என்று குற்றம் சாட்டுகிறார் அன்வார்.

இதுவரையில் அனைவருடனும் ஒத்துழைக்க நான் பின்தங்கியது இல்லை இருப்பினும், இதுபோன்ற (ஊழல்) நபர்களின் செயல்பாட்டினால் எனக்கான ஆதரவும் மதிப்பீடும் குறைவாகவே இருந்து வருகிறது.

ஊழல் நாட்டை சீரழிக்கும் என்பதில் நான் குறிப்பாக இருக்கின்றேன். இதுபோன்ற நிலையில் ஆதிக்கமும் செல்வமும் கொண்டவர்கள் எனக்கு ஆதரவாகச்  செயல்படுவதிலிருந்து ஒதுங்கிக் கொள்கின்றனர்.

என்னுடைய கடப்பாடு ஊழலுக்கு ஆதரவாக செயல்படுவது நாட்டையே சீரழிக்கும் என்பதாகும். இதிலிருந்து நான் விலகப் போவதில்லை என்கிறார் அன்வார் இப்ராகிம்.

பண்டோரா எனப்படும் அறிக்கைகளின் படி கோடிக்கணக்கான நமது நாட்டின் பணம் வெளிநாட்டுக்குக் கடத்தப்பட்டுள்ளது. இது சார்பாக வெளியான அறிக்கைகளின்படி இதில் முன்னாள் பிரதமர்களும் நிதி அமைச்சர்களும் ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளது. இவர்கள் இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவதோடு, “மலாய்காரர்களை காப்பாற்ற வேண்டும்” என்ற என்று இனவாத குரல் எழுப்புவது இவர்களின் நடத்தைக்கு முரண்பாடாக உள்ளது.

பண்டோரா  அறிக்கைகள் நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட வேண்டும் என்று அன்வார் இதற்கு முன்பு முன்மொழிந்துள்ளார். அது சார்பாக அன்வாரை ஊழல் ஒழிப்பு ஆணையம் அன்வாரை விசாரித்தது.

மேலும் செல்வாக்கு மிக்கவர்களிடையே பணம் அதிகம் இருப்பதால் இவர்கள் ஆதரவாளர்களைத் திரட்டி இவர்களுக்குச் சார்பாக இயங்க வைக்க முடிகிறது. எனவே பண அரசியலின் வழி அரசியல் நடத்துவது இன்று மலேசியாவின் நடைமுறையாக உள்ளது என்று சாடுகிறார் அன்வார்.