அமெரிக்காவின் சிகாகோ நகரில் சுதந்திர தின அணிவகுப்பில் துப்பாக்கிச்சூடு- 6 பேர் பலி, பலர் காயம்

அமெரிக்காவின் சிகாகோ (Chicago) நகரில் சுதந்திர தின அணிவகுப்பில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 6 பேர் மாண்டனர்.குறைந்தது 25 பேர் காயமுற்றனர்.

சந்தேக நபரான 22 வயது ராபர்ட் இ கிரிமோவைக் (Robert E Crimo) காவல்துறையினர் தேடிவருகின்றனர்.HighlandPark எனும் புறநகர்ப் பகுதியில் நடந்த அந்தத் தாக்குதல், குறிப்பிட்ட நோக்கம் ஏதுமின்றி நடத்தப்பட்டதாய் அதிகாரிகள் கூறினர்.

ஒரு கட்டடத்தின் கூரையில் உயர் ரகத் துப்பாக்கி கண்டுபிடிக்கப்பட்டது.
தாக்குதலைத் தொடர்ந்து சில வட்டாரங்கள் அவற்றின் அணிவகுப்புகளையும் வாண வேடிக்கைகளையும் ரத்து செய்துள்ளன.

மக்கள் வீட்டிற்குள் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டனர்.அமெரிக்காவில் அண்மை மாதங்களில் பல துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் நடந்துவிட்டன.

 

 

Seithimediacorp