ஆஸ்திரேலியா: சிட்னி சாலை ஓட்டப்பந்தயத்தில் 60,000க்கும் மேற்பட்டவர்கள்

ஆஸ்திரேலியாவின் நியூ சௌத் வேல்ஸ் மாநிலத்தின் தலைநகர் சிட்னியில் பெரிய அளவில் சாலை ஓட்டப்பந்தயம் இடம்பெற்றுள்ளது.

அதில் 60,000க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டனர். City2Surf எனும் நிகழ்ச்சியில் உலகின் ஆகப்பெரிய கேளிக்கை ஓட்டப்பந்தயம் இடம்பெற்றது.

ஆஸ்திரேலியாவின் ஆகப்பெரிய நகரான சிட்னியின் ஹைட் பார்க் முதல் போண்டி பீச் (Hyde Park, Bondi Beach) வரையிலான சாலை ஓட்டப் பாதையின் நீளம் 14 கிலோமீட்டர்.

டைனசார், கொரில்லா, நட்சத்திரங்கள் எனப் பல்வேறு மாறுவேடங்களிட்டவண்ணம் பங்கேற்பாளர்கள் பந்தயத்தில் கலந்துகொண்டனர்.

கடந்த ஈராண்டாகக் கோவிட் நோய்ப்பரவலால் நேரடியாக ஓட்டப்பந்தயம் நடைபெறவில்லை. இருப்பினும் மெய்நிகர் வழியாக City2Surf ஓட்டப்பந்தயங்கள் நடத்தப்பட்டன.

1971ஆம் ஆண்டில் முதன்முதலில் நடைபெற்ற City2Surf நிகழ்ச்சி ஆஸ்திரேலியாவின் தொண்டு நிறுவனங்கள் பலவற்றுக்கு மில்லியன்கணக்கான டாலர் நிதியைத் திரட்டுகிறது.

 

 

-smc