ஈரான்: அரசாங்க எதிர்ப்புப் போராட்டத்தில் தொலைக்காட்சி ஒளிவழி ஊடுருவல்

ஈரானின் உச்சத் தலைவருக்கு எதிரான போராட்டத்தில் அரசாங்க எதிர்ப்பாளர்கள் அரசாங்கத் தொலைக்காட்சி ஒளிவழியை ஊடுருவியுள்ளனர்.

தொலைக்காட்சிச் செய்தித் தொகுப்பு ஒளிபரப்பின் போது, உச்சத் தலைவர் ஆயத்துல்லா அலி கமெனியின் தலைக்குக் குறிவைக்கும் படம் ஒளியேற்றப்பட்டது.

ஈரானில் நான்காவது வாரமாக அரசாங்க எதிர்ப்புப் போராட்டம் நீடிக்கிறது. அதில் இணைந்து கொள்ள முன்வரும்படியும் தொலைக்காட்சியில் காட்டப்பட்ட படத்துடன் குறிப்பிடப்பட்டிருந்தது.

 

 

-smc