பொருளியல் திட்டத்தில் தவறுகள் – மன்னிப்புக் கேட்டுக்கொண்ட பிரிட்டிஷ் பிரதமர்

பிரிட்டனின் பிரதமர் லிஸ் டிரஸ் தமது பொருளியல் திட்டத்தில் உள்ள தவறுகளுக்கு மன்னிப்புக் கேட்டுக்கொண்டிருக்கிறார்.

அந்தத் திட்டம் மிக விரைவாகச் செயல்படுத்தப்பட்டது என்றும், குறுகிய காலக் கண்ணோட்டத்துடன் வெளியிடப்படவில்லை என்றும் அவர் சொன்னார்.

பிரிட்டனின் பிரதமர் பதவி விலக வேண்டும் எனும் கோரிக்கைகள் அதிகரித்துள்ளன. அவர் வெளியிட்ட சிறிய வரவுசெலவுத் திட்டத்தைப் பற்றி பலர் பரவலாகக் குறைகூறியதாகத் தெரிவிக்கப்பட்டது.

பிரிட்டனின் புதிய நிதியமைச்சர், வரவுசெலவுத் திட்டத்தில் பல திருத்தங்களை அறிவித்திருக்கிறார். நிதி ஒதுக்கீடற்ற வரிக் கழிவுகள், பொதுச் செலவுக் கட்டுப்பாடுகள் ஆகியவை அகற்றப்பட்டுள்ளன.

இருப்பினும், அடுத்த தேர்தல் வரை தாம் பதவியில் இருக்கப்போவதாகத் திருவாட்டி டிரஸ் வலியுறுத்தியிருக்கிறார்.

 

 

-mm