கம்போடியாவில் தென்கிழக்காசிய விளையாட்டடுகள் கோலாகலமாக தொடங்கியது

கம்போடியாவில் தென்கிழக்காசிய விளையாட்டுகளின் அதிகாரபூர்வத் தொடக்கவிழா மே 5 தொடங்கியது. கம்போடியா அதை முதன்முறையாக ஏற்றுநடத்துகிறது.

தென்கிழக்காசிய விளையாட்டுகளுக்காக விமான நிலையத்தில் தரையிறங்குவது முதல் போட்டிகள் முடியும்வரை வருகையாளர்களுக்குச் சிறப்பான அனுபவத்தைக் கொடுக்கக் கம்போடியா முற்படுகிறது.

நாட்டை உலகிற்கு மீண்டும் அறிமுகப்படுத்த இது ஒரு நல்ல வாய்ப்பு என்று அதிகாரிகள் கருதுகின்றனர்.

இருப்பினும் ஊழியர் பற்றாக்குறையால் உயர்தர விருந்தோம்பலை வழங்குவதில் அதிகாரிகள் சிரமத்தை எதிர்நோக்கியுள்ளனர். விளையாட்டாளர்கள் ஓர் இடத்திலிருந்து மற்றோர் இடத்திற்குச் செல்லக் காவல்துறையினரும் உதவுகின்றனர். தென்கிழக்காசிய விளையாட்டுகள் இம்மாதம் 17ஆம் தேதி நிறைவடையும்.

 

 

 

-sm