சீன அரசாங்கத்தின் அனுசரணையுடன் நிர்மாணிக்கப்படவுள்ள வீட்டுத் திட்டத்தின் கீழ் குறைந்த வருமானம் பெறுவோர், திறமையான கலைஞர்கள் மற்றும் ஊடகவியலாளர்களுக்கு வீடுகள் வழங்க நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு தீர்மானித்துள்ளது.
சீன அரசாங்கத்தின் அனுசரணையுடன், 1996 வீடுகளை நிர்மாணிக்கும் உடன்படிக்கை எதிர்வரும் மாதம் கைச்சாத்திடப்படவுள்ளதாக அமைச்சு அறிவித்துள்ளது.
சீனாவின் பீஜிங் நகரில் எதிர்வரும் மாதம் நடைபெறவுள்ள மாநாடொன்றின் போதே இந்த உடன்படிக்கை கைச்சாத்திடப்படவுள்ளது.
இவ்வாறு நிர்மாணிக்கப்படவுள்ள 1996 வீடுகளில், 108 வீடுகள் திறமையான கலைஞர்கள் மற்றும் ஊடகவியலாளர்களுக்கு வழங்கப்படவுள்ளதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
இந்த வீட்டுத் திட்டமானது கொட்டாவ – பலதுருவத்தை பகுதியில் நிர்மாணிக்கப்படவுள்ளதாகவும் அதற்காக சீன அரசாங்கத்தினால் 552 மில்லியன் யுவான் செலவிடப்படவுள்ளதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க மேலும் தெரிவித்துள்ளார்.
-tw