மலேசியஇன்று வாசகர்களுக்கு எங்களின் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

கடந்த பத்தாண்டுகளுடன் ஒப்பிடுகையில் முதல் 12 மாதங்களில் அரசியல் நிலைத்தன்மை சற்று மேம்பட்டுள்ளதை காண முடிகிறது.

ஆனால் இது ஒரு சுமூகமான பயணமாக இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். புயலும் காற்றும் மேலும் வேகமாக வருமா என்ற அரசியல் கவலை உள்ளது.

மலேசியாஇன்றுவில் உள்ள எங்கள் அனைவரிடமிருந்து, உங்களுக்கு  – குறிப்பாக எங்கள் வாசகர்களுக்கு – இனிய மகிழ்ச்சியான புத்தாண்டு வாழ்த்துக்கள்.

2024-இல் , புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வரும் பொழுது நாடு நல்ல  சீர்திருத்தங்களையும், அனைவருக்கும் அமைதி வழங்கும் சூழலையும் பெரும் என்ற நம்பிக்கை உள்ளது.

கடந்த 24 ஆண்டுகளாக  மலேசியப் பயணத்தைப் பகிர்ந்துகொள்வது எங்களின் பாக்கியம் என்று கருதுவதோடு மகிழ்ச்சியாகவும் இருக்கிறது.

நாங்கள் ஒரு சிறிய குழுவாக பணிபுரிகிறோம், தகுந்த தகவல் வழங்க முயன்று வருகிறோம்..

உங்களுக்குத் தேவையான கூடுதல் செய்திகளையும் பார்வைகளையும் தொடர்ந்து வழங்குவோம் என்ற நம்பிக்கை உள்ளது