இராமேஸ்வரம் வந்திருந்த இலங்கை குடியரசுத் தலைவர் மகிந்த ராஜபக்சேவின் தங்கை கணவர் மீது செருப்பு வீசப்பட்டது.
ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்கு ராஜபக்சேயின் தங்கையின் கணவர் தனது குடும்பத்தினருடன் வந்திருந்தார்.
இவரின் வருகையை அறிந்த அங்குள்ள ம.தி.மு.க. மற்றும் தமிழர் அமைப்பு கட்சியை சேர்ந்தவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
கோயிலில் சடங்குகள் முடிவடைந்த பின்னர் அவர் ஊருக்கு திரும்ப புறப்பட்டபோது அவரின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்தவர்கள் அவரை முற்றுகையிட்டு அவர் மீது செருப்பை வீசி கோஷங்கள் போட்டனர்.
இவரது வருகையையொட்டி போலீசார் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது எனினும் ஆர்பாட்ட நடத்த வந்தவர்கள் ராஜபக்சே மைத்துனர் மீது செருப்பை வீசி ஓடி விட்டனர். செருப்பு வீசியவர்கள் யார் என்ற விவரம் குறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
ஆனால் இராமேஸ்வரத்தில் வைத்து தன் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படும் செய்தியை ராஜபக்சேவின் மைத்துனர் மறுத்துள்ளார்.