ஸ்ரீ லங்காவில் சுவாமி விவேகானந்தர் சிலை உடைப்பு!

இலங்கையின் கிழக்கே  மட்டக்களப்பில் உள்ள ஆரையம்பதிக் கிராமத்திற்கும் முஸ்லீம் நகரமான காத்தான்குடி-க்கும் எல்லையில் அமைந்துள்ள சுவாமி விவேகாந்தரின் உருவச்சிலை நேற்று (செவ்வாய்கிழமை) காலை சரியாக 10 மணியளவில் மர்ம நபர்களால் உடைத்துச் சேதமாக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம், அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், அப்பகுதிக்கு பொறுப்பான காவல்துறை அதிகாரி லால் செனவிரத்ன, எம்.ஐ.எம்.சுபைர், பெ.சிவசுந்தரம் ஆகியோர் உட்பட்ட பலர் சம்பவ இடத்தை பார்வையிட்டனர்.

சுவாமி விவேகானந்தர் சிலையின் கை, கால் ஆகியன அடையாளம் தெரியாத நபர்களால் உடைக்கப்பட்டுள்ள அதேவேளை சம்பவம் இடம்பெற்ற பகுதியான தமிழ்-முஸ்லீம் எல்லையில் நேற்று பதற்ற நிலை உருவாகியிருந்தது. எனினும் சம்பவ இடத்திற்கு காவல்துறையினரும் இராணுவத்தினரும் அழைத்துவரப்பட்டதை அடுத்து நிலைமை வழமைக்குத் திரும்பியது.

இச்சம்பவம்  குறித்து, காத்தாக்குடி காவல்துறையினர் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் விசாரனைகளின்போது சந்தேக நபர் ஒருவரை காவல்துறையினர் கைதுசெய்துள்ளதாக மட்டக்களப்பு செய்திகள் தெரிவிக்கின்றன.

தமிழ்-முஸ்லீம் கிராமங்களுக்கிடையிலான எல்லைப் பகுதியில் இடம்பெற்றுள்ள இத்தாக்குதல் சம்வம் வேண்டுமென்ற தமிழ்-முஸ்லீம் இனங்களிடையே பிரச்னைகளை உண்டுபன்ன சிங்கள இனவாதிகளால் ஏற்படுத்தப்பட்ட சதி என சிலர் கருதுகின்றனர்.