போர் முடிவடைந்துவிட்டது என அரசால் அறிவிக்கப்பட்டதன் பின்னர் வடக்குக் கிழக்குப் பகுதிகளில் கலாசாரச் சீரழிவுகள் தலைதூக்கியுள்ளன. தமிழ் மக்களின் கல்வியை அழிப்பதற்காகவே இவ்வாறு தமிழர்ப் பகுதிகளில் கலாசாரச் சீரழிவுகளை திட்டமிட்டு சில தீய சக்திகள் கட்டவிழ்த்து விட்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்புப் நாடாளுமன்ற உறுப்பினர் பா. அரியநேத்திரன் தெரிவித்துள்ளார்.
வடக்கு கிழக்கு பகுதிகளில் பாடசாலை மாணவர்களிடையே கலாச்சார சீர்கேட்டை ஏற்படுத்தி தமிழ் மக்களின் கல்விச் செல்வத்தை பூண்டோடு அழிப்பதற்காக சில தீய சக்திகள் களமிறக்கப்பட்டுள்ளன என அரியநேத்திரன் தெரிவித்தார்.
தமிழீழ விடுதலைப் புலிகளின் விடுதலைப் போர் மௌனிக்கப்பட்டதன் பின்னர் இலங்கையின் வடக்கு கிழக்கு பகுதிகளில் தமிழ் மக்களிள் கலை கலாச்சாரங்கள் திட்டமிட்ட வகையில் அழிக்கப்படுகின்றன. குறிப்பாக பாடசாலை மாணவர்களிடையே கலாச்சார சீர்கேட்டை ஏற்படுத்தி தமிழ் மக்களின் கல்விச் செல்வத்தை பூண்டோடு அழிப்பதற்காக சில தீய சக்திகள் களமிறக்கப்பட்டுள்ளன என நாடாளுமன்ற உறுப்பினர் மேலும் கூறினார்.