பாரீஸ் ஸின் (Fareez Zin), நீதிபதி கன் டெச்சியோங்கிற்கு எதிராக இரண்டு குரல் பதிவுகள் (voice notes) மற்றும் நீதிபதியின் செயலாளருடனான ஒரு தொலைபேசி அழைப்பில் மிரட்டல் மற்றும் அவதூறான கருத்துகளைத் தெரிவித்தார்.
மலேசிய தலைநகர் கோலாலம்பூரின் உயர் நீதிமன்றத்தில் கடந்த மே மாதம் நீதிபதி கான் டெச்சியோங்கை (Justice Gan Techiong) மிரட்டியதாகக் குற்றம் சாட்டப்பட்ட நபர், ஆரம்பத்தில் தன் மீதான குற்றச்சாட்டை மறுத்து விசாரணை கோரினார்.
நீதிபதி ஒருவரை மிரட்டிய வழக்கில், குற்றத்தை ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து, அந்த நீதிபதியின் முன்னாள் ஓட்டுநருக்கு மூன்று மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
பாரீஸ் ஜின் (39) என்பவருக்கு கோலாலம்பூர் மேஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் மேஜிஸ்திரேட் ஹெங் யி மின் இந்தத் தண்டனையை வழங்கியதாக ‘ஹரியான் மெட்ரோ’ செய்தி வெளியிட்டுள்ளது.
கடந்த மே 8 ஆம் தேதி பிற்பகல் 1.30 மணியளவில், கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தில் (சிவில்) நீதிபதி கான் தெச்சியோங்கை (61) பயமுறுத்தும் நோக்கில் மிரட்டியதாக பாரீஸ் மீது குற்றஞ்சாட்டப்பட்டது. ஆரம்பத்தில் இவர் தன் மீதான குற்றச்சாட்டை மறுத்து விசாரணை கோரியிருந்தார்.
குற்றவியல் சட்டத்தின் பிரிவு 506-ன் கீழ் இந்த குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த பிரிவின் கீழ் குற்றவியல் மிரட்டல் குற்றம் நிரூபிக்கப்பட்டால் இரண்டு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை, அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.
மேலும், மரணம், பலத்த காயம் அல்லது தீ வைத்து சொத்துக்களை அழிப்பது போன்ற மிரட்டல்களுக்கு, குற்றம் நிரூபிக்கப்பட்டால் அதிகபட்சமாக ஏழு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை, அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படும்.
வழக்கின் விவரங்களின்படி, நீதிபதியின் செயலாளருடன் பேசிய தொலைபேசி அழைப்பிலும் இரண்டு குரல் குறிப்புகளிலும் (voice notes) நீதிபதி கானுக்கு எதிராக பாரீஸ் மிரட்டல் மற்றும் அவதூறான கருத்துக்களை தெரிவித்துள்ளார்.
குற்றத்தின் தீவிர தன்மையைக் கருத்தில் கொண்டு அதற்கு இணையான தண்டனையை வழங்குமாறு அரசு தரப்பு வழக்கறிஞர் இமான் நூர்ஹிதாயா எசானி நீதிமன்றத்தைக் கேட்டுக்கொண்டார்.
வழக்கறிஞர் ஷா ரிஸால் அப்துல் மனான், தனது கட்சிகாரருக்கு மூன்று குழந்தைகளும், வேலை இல்லாத மனைவியும் இருப்பதால் அவர்களைப் பராமரிக்க வேண்டிய நிலையில் உள்ளதாகக் கூறி, குறைவான தண்டனை வழங்குமாறு மேல்முறையீடு செய்தார்.
























