குழந்தைகளின் வளர்ச்சி குன்றுதலைத் (stunting) தடுப்பதற்காக 2027ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் உணவுத் திட்டத்தை சேர்க்க வேண்டும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கோரிக்கை விடுத்துள்ளார்.
2027 பட்ஜெட்டில், குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து நிறைந்த உணவை வழங்குவதற்கான “தேசிய உணவுத் திட்டத்தை” (National Meals Plan) மலேசிய அரசு அறிமுகப்படுத்த வேண்டும் என்று கிள்ளான் மேனாள் நாடாளுமன்ற உறுப்பினர் சார்லஸ் சந்தியாகோ வலியுறுத்தியுள்ளார்.
கோலாலம்பூரில் 23.4 சதவீத குழந்தைகள் வளர்ச்சிக்குன்றிய நிலையிலும் (stunted), 12.4 சதவீத குழந்தைகள் குறைந்த எடையுடனும், 8.1 சதவீத குழந்தைகள் மெலிவுடனும் (wasting) மற்றும் 7.5 சதவீத குழந்தைகள் அதிக எடையுடனும் இருப்பதாகச் சுகாதார அமைச்சர் துல்கெஃப்ளி அகமத் சென்ற வாரம் குறிப்பிட்டிருந்தார். அதற்குப் பதிலளிக்கும் வகையில் சார்லஸ் இக்கருத்தைத் தெரிவித்தார்.
குழந்தைகளின் வளர்ச்சிக்குறைபாட்டை வாழ்க்கைச் செலவினப் பிரச்சினையாகப் பார்க்க வேண்டும் என்று கூறிய சார்லஸ், “குடும்பங்கள் தங்களின் ஒவ்வொரு ரிங்கிட்டையும் சிக்கனமாகச் செலவழிக்க நிர்பந்திக்கப்படும்போது, சத்தான உணவுதான் முதலில் கைவிடப்படுகிறது” என்று குறிப்பிட்டார்.
“புரதச்சத்து, பழங்கள், காய்கறிகள், பால் மற்றும் ஊட்டச்சத்துமிக்க உணவுகளை வாங்குவது கடினமாகிறது. ஒரு குழந்தைக்கு வயிறு நிறைந்திருந்தாலும், அது சரியான ஊட்டச்சத்தைப் பெறாமல் இருக்கலாம்,” என்றும் அவர் கூறினார்.
சுற்றுச்சூழல்
சபாவில் உள்ள கெனிங்காவ் பகுதியில் இன்று காலை 9.31 மணிக்கு 3.4 ரிக்டர் அளவில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது என வானிலை ஆய்வு மையம் (MetMalaysia) தெரிவித்து உள்ளது.
கெனிங்காவிற்கு மேற்கே சுமார் 10 கி.மீ தொலைவில், 10 கி.மீ ஆழத்தில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது. இதன் அதிர்வுகள் கெனிங்காவ் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் உணரப்பட்டன.
நிலைமையைத் தொடர்ந்து கண்காணித்து வருவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை, பேராக்கில் உள்ள தெமெங்கோரில் 3.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
























