நமது உரிமைகளை நிலைநாட்ட நாமே களம் காண வேண்டும்

தென்னாப்பிரிக்காவில் வழக்கறிஞராகப் பணியாற்றிய மோகன்தாஸ் காந்தியின் அறப்போராட்டங்களுக்குத் துணையாக நின்று அவரை மகாத்மா காந்தியாக ஆக்கியவர்கள் தமிழர்கள். அவர் அழைப்பை ஏற்றுச் சிறை புகுந்தவர்களில் பெரும்பாலோர் தமிழர்கள். அவர்களில் ஒருத்தியான தில்லையாடி வள்ளியம்மை தனது உயிரைத் தியாகம் செய்து காந்தியடிகளின் அறப்போராட்டத்துக்கு முக்கியத்துவத்தை ஏற்படுத்தினார்.

தமிழ்நாட்டைச் சேர்ந்த ராஜாஜி, சத்தியமூர்த்தி, காமராஜ் போன்ற பல தலைவர்களும் எண்ணற்ற தொண்டர்களும் காந்தியடிகளை உளமாறப் பின்பற்றி எண்ணற்ற தியாகங்களைச் செய்தார்கள். அண்ணலின் அழைப்பையேற்று அறப்போரில் தடியடிக்கு ஆளாகி உயிர்நீத்தான் திருப்பூர் குமரன். நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் சிங்கப்பூரில் முதலாவது இந்திய சுதந்திர அரசை நிறுவி, இந்திய தேசிய இராணுவத்தை அமைத்தபோது அவருக்குத் தோள்கொடுத்துத் துணை நின்றவர்களில் பெரும்பாலோர் தமிழர்கள்.

இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, இந்தோனேசியா, பிஜி, மொரிசியஸ், பர்மா, தென்னாபிரிக்கா, அந்தமான்ஃநிகோபார் போன்ற இடங்களில் தமிழர்களின் பிரசன்னம் அதிகமாக இருந்தது. அவர்களின் கடினமான உழைப்பினால், குறித்த நாடுகள் பொருளாதார ரீதியில் பல அனுகூலங்களை அனுபவித்தார்கள். இவ் மக்களின் செல்வாக்கை வைத்தே இந்தியாவின் உலக நாடுகளுடனான இராஜதந்திர நல்லுறவை மேம்படுத்தலாம் என்பதை அன்று நன்கே உணர்ந்தார் நேரு. காலம் இன்று மாறிவிட்டது. உலகின் முக்கிய சக்தியாக இன்று இந்தியா வளந்துள்ளது. தமிழர்களின் தயவின்றி தனது செல்வாக்கை உலக அளவில் இன்று இந்தியா வைத்துள்ளது.

நமக்கு புண் வந்துவிட்டால் நாமேதான் மருத்துவமனை சென்று மருத்துவரைப் பார்க்க வேண்டும். நாம் வீட்டிற்குள் சோம்பேறிகளாக தூங்கிக் கொண்டிருந்துவிட்டு மருத்துவர் நமது வீடு வந்து புண்ணுக்கு மருந்து கொடுப்பாரென யதார்த்தத்திற்கு ஒத்துவராத கனவைக் காண்பது முட்டாள்த்தனம்.

நமது உரிமைகளை நிலைநாட்ட நாமே களம் காண வேண்டும். மற்றவர்கள் அதனை நமக்கு கொண்டுவந்து தரமாட்டார்கள் என்பதை தமிழ் மக்கள் அனைவரும் உணர்ந்தால் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வு கிடைத்துவிடும்.

அரசியல் என்பது மக்கள் மீது ஆட்சியை நடாத்தும் அல்லது அதிகாரத்தைச் செலுத்தும் விவகாரம் அல்ல. அரசியல் என்பது மக்களுக்குச் சேவை புரியும் பணி, மக்களின் நல்வாழ்வுக்கு ஆற்றப்படும் தொண்டு.  – தமிழீழ தேசியத் தலைவர்.

மலேசியத் தமிழர்களுக்கு மலேசிய நாட்டு, உலக நடப்புக்கள் தெரியவில்லை. ஏன் தன் மதத்தை பற்றியும் தாய் மொழியாகிய தமிழும் பேச தெரிந்தாலும், எழுதப் படிக்க தெரியவில்லை. இப்படியே போனால் நமது மதம், மொழி, கலை, கலாசாரம், பண்பாடு ஆகியவை அழிந்துவிடும்.

முன்பு ஆண்கள் பல தீய நடவடிக்கைகளில் ஈடுபட்டுவந்தனர் – மது, மாது, சூது திருமணம் ஆகியும் மற்ற பெண்களிடம் கள்ள தொடர்பு போன்றவை. இப்பொழுதோ அதிகமான பெண்களும் ஆண்களுக்கு போட்டியாய் தீய நடவடிக்கைகளில் ஈடுபட ஆரம்பித்துள்ளனர்.  சிலர் திருமணமாகி பிள்ளைகள் இருந்தும் கள்ள காதலனுடன் ஓடியும் போயுள்ளனர். பிள்ளைகள் நிர்கதியாக தந்தையின் பரிமாரிப்பில் விடப்படுகின்றனர். இதனால் பிள்ளைகளுக்கு தாயன்பு கிடைக்காமல் போகிறது. இந்த பிரச்சனைகளை தீர்க்க வேண்டுமானால் நம் சமுதாயத்தினருக்கு நல்லொழுக்கம், மத நெறி படிப்பு, தமிழ் மொழி பயில்தல், கற்பு நெறி, ஆண், பெண்  எப்படி நடத்தல், கோவிலுக்கு போதல் மிக முக்கியமாகும்.

மலேசிய இந்தியர்கள் ஒருபுறம் பகடைக்காய்களாக நகர்த்தப்பட்டனர், மறுபுறம் ம.இ.கா என்பது பணம் சம்பாதிக்கும் இடைத்தரகராக அரசாங்க பதவிகளில் இந்தியர்களின் பிரதிநிதியாக இயங்கியது. நகராண்மைக்கழக உறுப்பினர் முதல் அமைச்சர் வரை இவர்கள் தங்களை உரிமை அரசியல் அற்ற நிலையில், அம்னோவின் அரசியல் அடிமைகளாகவே செயல்பட்டனர்.

தமிழர்களிடம் ஒற்றுமை என்பதே இல்லை; அதைத்தான் அரசாங்கமும் விரும்புகிறது. தலைவர்கள் என்று கூறிக்கொள்வோரும் விரும்புகின்றனர் – இதை வைத்துத்தான் தங்களின் சுயநலத்தையும், பதவி, அதிகாரம், பணம், பட்டம் போன்றவற்றை பெறமுடியும் என்பது இவர்களுக்கு நன்றாக தெரியும். அதனால் தான் தமிழ் மக்களிடம் பொய்யும், புரட்டும் சொல்லி, பல இனிப்பான வாக்குறுதிகளை கொடுத்து பொது தேர்தலில் வென்ற பின் இந்த ஏழை தமிழர்களை ஏமாற்றிவிடுவார். அதோடு அரிசி, சீனி, சிறிய பண முடிப்பும், கோழி, ஆட்டு இறைச்சி கறியோடு சாதம் படைத்து சில நாட்கள்  நன்றாக கவனித்துக்கொள்வார்கள். ஏமாற இளிச்சவாய் தமிழர்களும் பெரும்பான்மையாக இருக்கிறார்கள்!!!

தேசிய முன்னணியின் பிடிஎன் கல்லூரியின் போதகர்களும் அதன் ஆதரவாளர்களும் மலேசிய மக்களாகிய இந்தியர்களையும் சீனர்களையும் வந்தேறிகள், உடலை விற்க வந்தவர்கள், பிச்சைக்காரர்கள், குடிகாரர்கள், நாய்க்குப் பிறந்தவர்கள் என்றும் சீனர்கள் சின்னக்கண்ணர்கள், குடிகார இந்தியர்களுக்கு பத்துமலையில் ஏறி இறங்கத்தான் தெரியும் என்றெல்லாம் இழிவுபடுத்தி வருவதாக சென்றவர்கள் குமுறுகிறார்கள். அதோடு இந்தியர்கள் அடிமைகள், நாட்டின் துரோகிகள், வீண் பிரச்சனை கொடுப்பவர்கள், நாட்டிக்கு ஒன்றும் செய்யாதவர்கள், கருப்பர்கள்,  நாட்டுக்கு வேண்டபடாதவர்கள் என்றும் எல்லார் முன்னிலையில் அவமானபடுத்தபடுகின்றனர்.

சீன, இந்திய மாணவர்களிடம் சீனாவுக்கும் இந்தியாவுக்கும் திரும்பிப் போங்கள் என்று அவர்களின் ஆசிரியர்கள் கூற்று நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. ஒரு வருடமாக நம் இனத்தை ஆட்டிப் படைத்த இண்டர்லோக் கடைசியாக பள்ளிகளில் இருந்து மீட்டுகொள்ளபட்டுள்ளது.

தமிழ் மொழி, தமிழ் இலக்கணம் SPM-ல் முன்பு இருந்த அங்கீகாரத்தை இழந்தது பிரதமர் நஜிப் காலத்திலேயே. நம் இன மாணவர்களுக்கு ஒன்பது சகவித இடங்கள் பல்கலைகழகங்களில் கொடுக்கப்பட்டதாக நம் இன தலைவர்கள் கூறி இவரை  எப்படியெல்லாம் பாராட்டினர் என்பது தமிழ் தினசரி படிப்பவர்களுக்கு நன்றாக தெரியும். இவர்கள் சொன்னது அனைத்தும் பொய் என்று கூறி உண்மை புள்ளிவிபரங்களை வெளியிட்டேன். அதாவது 3.66 சகவிதமே நம் மாணவர்களுக்கு கிடைத்தது என்று நஜிப் நம் சமுதாயத்தினரிடம் அரசாங்க பணியிலும், கல்லூரிகளிலும் நம் இனத்தவர்களை அதிகமாக எடுப்பதாக சொன்னார்.  இதுவும் சுத்த பொய். அப்துல்லா படாவி பதவி விலகமுன்தான் சற்று அதிகமான இந்தியர்கள் எடுக்கப்பட்டனர். இவர் வந்தபின் அதுவும் பழைய நிலைமைக்கே திரும்பிவிட்டது. உதாரணமாக இந்த வருடம் ஒரு மருத்துவ் கல்லூரியில் ஆறே இந்திய மாணவர்களுக்கு இடம் கிடைத்துள்ளது – அதே சமயத்தில் 332 மலாய் மாணவர்கள் எடுக்கப்பட்டுள்ளனர். சிப்பாங் அனைத்துலக விமான நிலையத்தில் 21 தமிழர்கள் புதிதாக எடுக்கப்பட்டனர் – தமிழில் பொது அறிவிப்பு செய்வதற்க்கு என்று எல்லா தினசரிகளில் இவர்களின் புகைப்படத்தோடு செய்தி பிரசுரிக்கப்பட்டது. உண்மையில் யாரும் புதிதாக எடுக்கப்படவில்லை. மலேசிய ஏர்போர்ட் ஹோல்டிங்க்ஸ் பெர்ஹடில் அதன் கிளை நிறுவனங்களில் பல பகுதிகளில் வேலை செய்யும் தமிழ் பேசமுடிந்தவர்களை இந்த பகுதிக்கு மாற்றி புகைப்படத்தை எடுத்து விளம்பரம் செய்துள்ளனர்.

கடந்த பத்தாண்டுகளில் இனவாதம் முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு வளர்ந்துள்ளது. அம்னோ பேரவைகளில் மலாய் மேலாண்மை அழுத்தமாக வலியுறுத்தப்பட்டு வருகிறது. தமிழ், சீனப் பள்ளிகளை முடிவுக்குக் கொண்டு வரும் கருத்தில் ஒரே பள்ளி முறை மீண்டும் மீண்டும் பேசப்படுகிறது. சரித்தர நூலில் மலாய்கார ஆசிரியர்களை கொண்டு பல திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன. இந்தியர்கள் இன்னாட்டிக்கு செய்த தியாகங்கள், நன்மைகள் எல்லாம் நீக்கப்பட்டுள்ளது. அவர்களை நாட்டின் எதிரிகளாக காட்டப்பட்டுள்ளது.

இந்தியர்கள் குறிப்பாக தமிழர்கள் மூலம்தான் மலாய் மொழியே ஆக்கம் பெற்றது. முன்ஷி அப்துல்லாஹ் என்ற தமிழ் இஸ்லாமியார் தமிழையும், சமஸ்கிரததையும் கொண்டு மலாய் மொழியை உருவாக்கினார். பின் சீன மொழியிருந்தும் வார்த்தைகளை சேர்த்தார். அதேபோல் தமிழர்களிடமிருந்து மலாய் நாகரிகம், கலாசாரம், பண்பாடு போன்றவையும் உருவாக்கினார். இப்போது அவை சில, சில மாற்றங்களோடு மலாய்காரர்களால் பின்பற்றபடுகிறது. மலாக்கா சாம்ராஜ்யத்தை போர்துகீசியர் தாக்குவதற்கு உதவி செய்தவர்கள் சீன வணிகர்கள். இப்போது சீன வணிகர்கள் என்ற வார்த்தையை எடுத்துவிட்டு இந்திய வணிகர்கள் என்று எழுதபட்டிருக்கிறது.

[Karanraj Sathianathan]