இலங்கையின் MIG 27 போர்விமானம் வெடித்து சிதறியது!

இலங்கை ஆகாயப் படைக்குச் சொந்தமான MIG 27 ரக போர் விமானமொன்று இன்று மதியம் வெடித்து சிதறியுள்ளது. அவ்விமானத்தில் ஏற்பட்ட இயந்திர கோளாறு காரணமாகவே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

ஆகயாத்தில் வெடித்து சிதறிய விமானம் இலங்கையின் புத்தளம் மாவட்டத்திற்குட்பட்ட தும்மல சூரிய என்ற பகுதியில் விழுந்து சேதமாகியுள்ளதாக ஆகாயப்படை அதிகாரியொருவர் தெரிவித்தார்.

இன்று முற்பகல் ஆகாயப்படை பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது குறித்த விமானத்தில் ஏற்பட்ட கோளாறை அறிந்த விமானி பாதுகாப்பு கருதி உடனடியாக உயிர்காவி இருக்கையை இயக்கி உயிர்தப்பியுள்ளார். தரையில் வீழ்ந்த விமானம் கடும் சேதத்திற்குள்ளாகியுள்ளது.

இதனையடுத்து சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொள்ள விசேட குழுவொன்றை ஆகாயப்படை தளபதி எயார் மார்ஸல் ஹர்ஸ அபேவிக்ரம பணித்துள்ளார்.

TAGS: