மனித உரிமை மன்ற அமர்வுகளில் கலந்து கொள்ளும் நோக்கில் பிரான்ஸ் உள்ள விடுதலைப் புலிகளின் வலையமைப்பு ஜெனிவாவிற்கு பயணம் மேற்கொள்ளவுள்ளதாக கொழும்பு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
எதிர்வரும் மார்ச் மாதம் 3ஆம் தேதி பிரான்ஸ் புலிகளின் வலையமைப்பு ஜெனிவாவில் இலங்கை அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டமொன்றை நடத்தத் திட்டமிட்டுள்ளதாக அச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், ஜெனிவா செல்வதற்காக விசேட புகையிரதம் ஒன்றும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அந்த அதிவேக புகையிரத்திற்கு ‘பிரபாகரன்’ என பெயரிடப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புகையிரத்தை ஏற்பாடு செய்வதற்காக ஒரு லட்சம் யூரோ செலவிடப்பட்டுள்ளதாகவும் ஜெனிவாவிற்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் போர்வையில் ரயில் ஒதுக்கப்பட்டுள்ளது என கொழும்பு திவயின பத்திரிகை சுட்டிக்காட்டியுள்ளது.