இலங்கையில் மாபெரும் தொடர் போராட்டங்கள் இடம்பெறக் கூடிய அபாயம் காணப்படுவதாக இலங்கைப் புலனாய்வுப் பிரிவினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
எரிபொருள் விலையேற்றம், மக்களுக்கெதிரான அடக்குமுறை மற்றும் இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு போராட்டம் நடத்தப்படவுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன.
இலங்கையின் சிலாபத்தில் நடைபெற்ற மீனவர் ஆர்ப்பாட்டத்தை விடவும் மோசமானதாக இந்த தொடர் போராட்டங்கள் அமையக் கூடும் என புலனாய்வுப் பிரிவினர், பாதுகாப்பு தரப்பினருக்கு அறிவித்துள்ளனர்.
இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சிப் பொருட்கள் சேவைகளின் விலையேற்றத்திற்கு வழி கோலும் எனவும் இதனால் மக்கள் கடும் அதிருப்தி அடையக் கூடிய நிலைமை ஏற்படும் எனவும் இலங்கைப் புலனாய்வுப் பிரிவினர் குறிப்பிட்டுள்ளனர்.
கட்சி பேதமின்றி மக்கள் மத்தியில் அதிருப்தி ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.