இலண்டனில் இடம்பெற்ற தமிழ் மொழி மீட்பின் தொடர் “கற்க கசடற 2012”

“தேமதுர தமிழோசை உலகமெலாம்பரவும் வகை செய்தல் வேண்டும்” என்பதற்கிணங்க, புலம் பெயர்ந்து வாழும் தமிழ்ச் சமூகம் தமிழ் மொழியையும் அதன் பெருமையையும் தமக்கும், தமது எதிர்கால சமுதாயத்திற்கும் எடுத்துரைத்து அவர்களை ஊக்குவிக்கும் வகையில் இலண்டனில் தமிழ் இளையோர் அமைப்பின் ஏற்பாட்டில் ‘கற்க கசடற 2012’ திருக்குறள் போட்டி நடைபெற்றது.

இந்நிகழ்வு பேச்சு, பாடல், நடனம், பரதநாட்டியம் போன்றவையும் அத்துடன், போட்டியாளர்களை பாராட்டி பரிசு வழங்குதல் போன்ற நிகழ்வுகளையும் உள்ளடக்கியதாக அமைந்தது. தலைமை விருந்திராக புலவர் சிவநாதன் மற்றும் திருமதி. சிவநாதன் ஆகியோருடன் பலர் கலந்து சிறப்பித்தனர்.

புலவர் திரு. சிவநாதன் தான் வழங்கிய சிற்றுரையில் நிகழ்வை சிறப்பாக பாராட்டி பேசியதுடன், இனி இடம்பெறவுள்ள வேலைத்திட்டங்களுக்கும் வாழ்த்துக்களை கூறினார்.

இந்தப் போட்டியில் பங்குபற்றியவர்களினதும் அவர்களின் பெற்றோர் மற்றும் உறவினரது பங்களிப்பும் மிகவும் ஆதரவாக அமைந்தது. நேற்றைய நிகழ்வில் அந்தநிகழ்விடம் நிரம்பும் படியாக அமைந்திருந்தது அவர்களின் ஆதரவும், வரவேற்பும். அத்துடன், பரிசு பெற்றவர்களில் சிலர் தங்களது பரிசை இளையோர் அமைப்பிற்கு நன்கொடையாக வழங்கியது நன்றிக்குரியது என இலண்டன் தமிழ் இளையோர் அமைப்பு தெரிவித்தது.