இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை வலுப்படுத்தும் நடவடிக்கையில் அமெரிக்கா!

இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை ஐ.நா மனித உரிமைகள் மன்றத்தில் முன்வைக்கவுள்ள அமெரிக்கா, அந்தத் தீர்மானத்தை வலுப்படுத்துவதற்காக தனது அரசுத் துறையின் மிகமூத்த அதிகாரியான மரியா ஒற்றேரோவை ஜெனிவாவுக்கு அனுப்பவுள்ளது.

இலங்கை மற்றும் சிரிய விவகாரங்கள் குறித்து ஐ.நா மனித உரிமைகள் மன்றத் கூட்டத்தொடரில் மரியா ஒரேரோ சிறப்புரை நிகழ்த்தவுள்ளார்.

அமெரிக்க இராஜாங்கத் துறையின் பொதுமக்கள் பாதுகாப்பு, ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகளுக்கான கீழ்நிலைச் செயலாளராகப் பணியாற்றிவரும் மரியா ஒற்றேரோ, மார்ச் 1-ம் நாள் ஜெனிவா கூட்டத்தொடரில் உரை நிகழ்த்த வாய்ப்புகள் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இவர் சில வாரங்களுக்கு முன்னர், இந்தத் தீர்மானம் தொடர்பாக இலங்கை அரசுக்கு முறைப்படி அறிவித்து எச்சரிப்பதற்காக அமெரிக்க தூதர் ராபேட் ஓ பிளேக்குடன் இலங்கை சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

TAGS: