இலங்கைக்கு எதிரான தீர்மானத்திற்கு 25 நாடுகள் ஆதரவு

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் மன்றத்தில் 19-வது அமர்வில் இலங்கைக்கு எதிராகக் கொண்டுவர உள்ளதாக கூறப்படும் தீர்மானத்திற்கு 25 நாடுகள் ஆதரவு வழங்கவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை அமெரிக்கா, கனடா அல்லது மேற்கு நாடு ஒன்று கொண்டு வரலாம் என்று எதிர்பார்ப்பு இருந்தபோதும் ஆபிரிக்கா அல்லது தென்னமெரிக்க நாடு ஒன்றே அதனைக் கொண்டு வரும் என்று இப்போது தெரிவிக்கப்படுகிறது.

47 நாடுகளைக் கொண்ட மனித உரிமைகள் மன்றத்தில் 24 நாடுகளின் ஆதரவு இருந்தால் ஒரு தீர்மானத்தை நிறைவேற்ற முடியும். அமெரிக்கா மற்றும் மேற்கு நாடுகள் இலங்கைக்கு எதிரான தீர்மானத்திற்கு தமது உறுதியான ஆதரவைத் தெரிவித்துள்ளன. அதேபோன்று ஆபிரிக்க நாடுகளும் தமது ஆதரவைத் தெரிவிக்கவுள்ளன.

ஆபிரிக்க நாடுகள் இரண்டு மற்றும் மெக்சிக்கோ உள்ளிட்ட தென்னமெரிக்க நாடுகள் இரண்டு மற்றும் பெல்ஜியம் ஆகியன ஐந்து நாடுகளில் ஒன்று அல்லது ஐந்தும் கூட்டாகப் முன்வைக்கலாம் என்று கூறப்படுகின்றது. மேலும் இந்த தீர்மானம் அனேகமாக நிறைவேறிவிடும் என்றும் நம்பப்படுகின்றது.

TAGS: