இலங்கை மீது போர்க்குற்ற விசாரணையை தொடருங்கள்: நிபுணர்க் குழு

ஐக்கிய நாடுகள் மன்றத்தின் சட்டத்திட்டங்களை மீறி, தருஷ்மன் தலைமையிலான நிபுணர்கள் குழு இலங்கைக்கு எதிராக அனைத்துலக விசாரணையை ஆரம்பிக்குமாறு மனித உரிமை மன்றத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அமெரிக்காவினால் இலங்கை தொடர்பில் தாக்கல் செய்ய உள்ள யோசனையை மனித உரிமை பேரவையின் உறுப்பினர்கள் கண்காணித்து வருகின்றனர் என தெரிவித்துள்ள தருஷ்மன் குழுவினர், அமெரிக்காவின் யோசனை போதுமாதல்ல எனவும் போர் குற்றத்துடன் தொடர்புடையவர்களை கண்டறிய சுயாதீன விசாரணை நடத்தும் செயற்பாடுகளை பேரவை முன்னெடுக்க வேண்டும் எனவும் கேட்டுள்ளனர்.

இந்த கோரிக்கை தொடர்பில் தருஷ்மன் குழுவினர் ஜெனிவா மனித உரிமை மன்றத்திற்கு கோரிக்கை மனு ஒன்றை அனுப்பியுள்ளனர். மர்சுகி தருஷ்மன், ஸ்டீவன் ரட்னர், யஷ்மின் சூகா ஆகியோர் அனுப்பியுள்ள இந்த மனுவில், மருத்துமனைகள் மீது விமான தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகவும், பொதுமக்கள் மீது எந்த பொறுப்புமின்றி தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் கூறியுள்ளனர்.

இந்த விடயத்தில் இலங்கை தனது பொறுப்பை நிறைவேற்றுகிறதா இல்லை என்பதை விசாரணை செய்ய வேண்டியது அனைத்துலகத்தின் பொறுப்பு எனவும் நிபுணர்கள் குழுவின் உறுப்பினர்கள் தமது மனுவில் கூறியுள்ளனர்.

TAGS: