இலங்கைக்கு எதிரான அமெரிக்க தீர்மானம்: TNA ஆதரவு

இலங்கையில் நடந்த போரில் இலட்சக்கணக்கான தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர். தமிழீழ மக்கள் ஈவு இரக்கமின்றி கொன்று குவிக்கப்பட்டனர். இலங்கையின் இந்த போர்க்குற்றத்திற்கு பல நாடுகள் எதிர்ப்பும் வருத்தமும் தெரிவித்து வந்தன. இந்நிலையில் இலங்கைக்கு எதிரான தீர்மானம் ஒன்றை ஐ.நா. மன்றத்தில் அமெரிக்கா கொண்டுவந்துள்ளது.

உலக அளவில் ஈழத் தமிழர்களுக்கு எதிரான பயங்கரவாதத்தை விவாதிக்கும் சூழலை இந்தத் தீர்மானம் உருவாக்கியுள்ளது. இந்த தீர்மானத்தை இலங்கையிலுள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பு கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது.

தற்போது ஐ.நா. மன்றத்தில் நடந்து கொண்டிருக்கும் கூட்டத்தொடரில் இலங்கைக்கு எதிரான கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டதை அக்கட்சி வரவேற்றுள்ளது.

இந்த தீர்மானம் இலங்கையில் அமைதி, நீதி மற்றும் சமரசம் ஆகியவற்றை நிலைநிறுத்தும் வழிகளை அமைக்கும் என்று நம்புவதாக அக்கட்சி தெரிவித்துள்ளது.

வரும் 22-ம் தேதி  இந்த தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடக்க இருக்கிறது. இதில் 24 நாடுகள் தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்தால் இலங்கையின் மீது அனைத்துலக அளவில் நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிகிறது.

TAGS: