இலங்கையில் பணிமனையை நிறுவுகிறது மனித உரிமை ஆணையம்

ஐ.நா மனித உரிமைகள் மன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் இலங்கை அரசால் முறையாக நடைமுறைப்படுத்தப் படுகிறதா என்பதனை கண்காணிக்கும் நோக்கில், இலங்கையில் தனது பணிமனை ஒன்றை நிறுவ மனித உரிமைகள் ஆணையம் தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியாகிவுள்ளது.

ஐக்கிய நாடுகள் அமைப்பிற்கான, இலங்கைக் கிளையின் ஓர் அங்கமாக இந்தக் கண்காணிப்புக் பணிமனை இயங்கும் என்று கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

உலகின் சில நாடுகளைச் சேர்ந்த சிறந்த நிபுணர்கள் குழு இப்பணிமனையில் பணியாற்ற நியமிக்கப்பட்டுள்ளனர் என்பதுடன் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையம் இந்த பணிமனையின் பணிகளை நேரடியாக கண்காணிக்கும் என தெரிவிக்கப்படுகிறது.

அண்மையில் ஐநா மனித உரிமை மன்றத்தில் அமெரிக்காவில் கொண்டுவரப்பட்ட இலங்கைக்கு எதிரான தீர்மானத்தில் பரிந்துரை செய்யப்பட்ட விடயங்கள் நடைமுறைப்படுத்தப்படுகிறதா என கண்காணிப்பு செய்து, தேவையான தொழில்நுட்ப ஆலோசனைகளை வழங்குவதே இந்த பணிமனையின் முக்கிய இலக்கு எனத் தெரிவிக்கப்படுகிறது.

TAGS: