கடாபியின் நிலை தனக்கு வந்துவிடுமென அஞ்சுகிறார் ராஜபக்சே!

லிபியாவில் மாபெரும் மக்கள் போராட்டத்தின் பின் அந்நாட்டு சர்வதிகாரத் தலைவர் கர்ணல் கடாபியை அந்நாட்டு புரட்சியாளர்கள் உயிரோடு பிடித்து சுட்டுக்கொன்றனர்.

இதேநிலை இலங்கையில் தனக்கு  ஏற்பட நாட்டு மக்கள் ஒருபோதும் இடமளிக்கமாட்டார்கள் என இலங்கை குடியரசுத் தலைவரும் போர்க்குற்றவாளியுமான ராஜபக்சே ஒரு கூட்டத்தின்போது பேசியுள்ளார்.

“ஆயிரக்கணக்கான வருடங்களுக்கு முன்னிருந்தே எமது நாட்டை கைப்பற்ற ஒல்லாந்தர், போர்த்துகேயர், ஆங்கிலேயர் என பலர் பல முறை முயற்சி செய்த போதும் அவர்களால் எம் மத்தியில் ஒற்றுமை இருக்கும் வரைக்கும் ஒன்றும் செய்ய முடியவில்லை.”

தற்போது அரசு சார்பற்ற நிறுவனம் என்று கூறிக் கொள்ளும் ஒரு சில அமைப்புகளும்  கனவு காணும் சில அரசியல் கட்சிகளும் நாட்டுக்கு எதிராக செயற்படுகின்றன. அவர்களுக்கு நான் கூற விரும்புவது, நாட்டின் அதிகாரத்தை கைப்பற்ற முன் கட்சியின் அதிகாரத்தை கைப்பற்றுங்கள், அதற்கு பின் நாட்டை பற்றி சிந்திக்கலாம் என்பதாகும். இவர்களது பொய்ப் பிரச்சாரங்களுக்கு ஏமாறாமல் நாட்டின் பாதுகாப்புக்கு அனைவரும் ஒன்று சேர வேண்டும்” என ராஜபக்சே அக்கூட்டத்தில் உரையாற்றினார்.

கடாபியின் ஆட்சிக்கு கீழ் லிபியா இருந்தவேளையில் கர்ணல் கடாபியுடன் ராஜபக்சே நெருங்கிய நண்பராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

TAGS: