மாட் சாபு vs கைரி: கொசுவைக் கொல்ல பீரங்கியா?

“இப்போது தெளிவாகத் தெரிகிறது. மாட் இந்திராதான் உண்மையான வீரர். பிரிட்டிஷாரும் அவர்களின் அல்லக்கைகளும் நாட்டின் எதிரிகள். இதைப் புரிய வைத்த மாட் சாபுவுக்கு நன்றி”.

மாட் சாபு: பாஸ் இளைஞர்கள் கைரியை எதிர்த்து வாதமிடுவர்

பால் வாரன்: புக்கிட் கெப்போங் விவகாரம் எனக்குப் புரியவில்லை. வரலாற்றின் இன்னொரு காலக் கட்டம் பற்றிப் படித்துக் கொண்டிருந்தபோது அதில் ஜேம்ஸ் பெர்ச் வீரராகச் சித்திரிக்கப்பட்டிருந்தார். அவரை மஹாராஜாலேலா என்பவர் கொன்று விடுவார்.

வரலாற்று நூலில் வரையப்பட்ட படத்தில் பெர்ச் ஒரு அத்தாப் குடிசைபோல் காணப்படும்  கழிப்பறையில் இருப்பார். மஹாராஜாலேலா கையில் வேல்கம்பு ஒன்றுடன் அந்தக் குடிசையை நோக்கி வந்துகொண்டிருப்பார்.

இன்று மஹாராஜாலேலாதான் வீரர். பெர்ச் வில்லனாகி விட்டார். கோலாலம்பூரில் பெர்ச் சாலைகூட மஹாராஜாலேலா சாலையாக மாறிவிட்டது.

இதே கோணத்தில்தான் புக்கிட் கெப்போங் நிகழ்வையும் பார்க்க வேண்டும். சுதந்திரத்துக்காக போராடும் தேசியவாதிகள், புக்கிட் கெப்போங்கில் இருந்த போலீஸ்காரர்களைப் பகைவர்களைப் பாதுகாப்பவர்களாகத்தானே கருதியிருப்பார்கள்?

இபான் வீரன்: காலனியவாதிகளுடன் சேர்ந்து சூழ்ச்சி செய்வோரை ஹீரோக்கள் என்கிறார்கள்.  என்ன அநியாயமடா, சாமி.

பெயரிலி: இப்போது தெளிவாகத் தெரிகிறது. மாட் இந்திராதான் உண்மையான வீரர். பிரிட்டிஷாரும் அவர்களின் அல்லக்கைகளும் நாட்டின் எதிரிகள். இதைப் புரிய வைத்த மாட் சாபுவுக்கு நன்றி.

பல இனவாதி: கைரி விளம்பரத்துக்கு அலைகிறார். அதற்கு இடம்கொடுக்ககூடாது.

பங்சா மலேசியா: மாட் சாபு சொன்னது உண்மை. கொசுவைக் கொல்ல பீரங்கியா?

கைரி: “என்னுடன் வாதிக்க மாட் சாபு பயப்படுகிறார்”

டேனிலோ: அம்னோ எல்லாவற்றையும் திரித்துக் கூறுகிறது. வாதமிடத் தயாரா என்று சவால் விட்டவர் மாட் சாபு அல்ல, பாஸ் தகவல் பிரிவுத் தலைவர் துவான் இப்ராகிம் துவான் மான்.
என்னமோ மாட் சாபுதான் வாதத்துக்கு அழைத்தார் என்பதுபோல் பேசுகிறார் கைரி.

டான்: கைரி அம்னோவில் தம்மை நிலைநிறுத்திக்கொள்ள பலவற்றையும் செய்ய வேண்டியுள்ளது. அம்னோ இளைஞர் தலைவர் என்றாலும் அடுத்த தேர்தலில் இடம் கிடைக்குமா என்பதே உறுதியாக தெரியவில்லை. அதனால் அங்கும் இங்கும் சவால் விடுத்து விளம்பரம் தேடிக்கொள்ளப் பார்க்கிறார்.

மேமே: தன்னைப் பற்றிப் பெரிதாக நினைத்துக்கொண்டிருக்கிறார் கைரி. அம்னோவில் அவருக்கு மதிப்பே இல்லை. சொந்த எஜமானர்களே மட்டம் தட்டி வைத்திருக்கிறார்கள்.அவருடன் வாதிடுவதில் அர்த்தமில்லை.

மலேசிய விசுவாசி: மாட் சாபுதான் கோழை. புக்கிட் கெப்போங் பற்றிப் பேசி சர்ச்சையை உண்டுபண்ணிய அவர் அதை மறுப்போருக்கு எதிராக வாதிட தயங்குவது ஏன்?

எதிர்ப்பாளன்: கைரி, அம்னோ இளைஞர் தலைவரும் ரெம்பாவ் எம்பியுமான உங்களை ஒரு துணை அமைச்சர் ஆக்கும் அளவுக்குக்கூட உங்கள் கட்சித் தலைவருக்கு உங்களிடம் நம்பிக்கை இல்லை. 

துணை அமைச்சர் பதவி அம்னோ இளைஞர் துணைத் தலைவரான ரசாலி இப்ராகிமுக்கு வழங்கப்பட்டது. அம்னோ உங்களிடம் திறமையில்லை என்று நினைக்கிறதா? நான் அப்படித்தான் நினைக்கிறேன். அதனால், உங்களுடன் வாதிட பாஸின் சாதாரண உறுப்பினர்கள் போதும்.

TAGS: