இந்தியா மீது கோபமில்லை என்கிறார் இலங்கை அமைச்சர்

ஐ.நா., மனித உரிமை ஆணையத்தில், இலங்கைக்கு எதிராக வாக்களித்ததால், இந்தியா மீது கோபமில்லை என, இலங்கை வெளியுறவு அமைச்சர் பீரிஸ் தெரிவித்துள்ளார்.

இலங்கையில், விடுதலைப் புலிகளுக்கும் இராணுவத்துக்கும் இடையே நடந்த இறுதிக் கட்டப் போரில், அப்பாவி மக்கள் பலர் கொல்லப்பட்டனர். இந்த சண்டையின் போது நடந்த போர்க் குற்றம் குறித்து விசாரிக்க வேண்டும் என, இலங்கைக்கு எதிராக அமெரிக்கா, ஐ.நா., மனித உரிமை ஆணையத்தில் தீர்மானம் கொண்டு வந்தது.

இலங்கைக்கு எதிரான இந்த தீர்மானத்தை, இந்தியா ஆதரித்து வாக்களித்தது. இந்த தீர்மானத்தை ஏற்க முடியாது என, இலங்கை தெரிவித்திருந்தது.

இதற்கிடையே, இலங்கை நாடாளுமன்றத்தில் வெளியுறவு அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் குறிப்பிடுகையில், “ஐ.நா., மனித உரிமை கவுன்சிலில், இலங்கைக்கு எதிராக இந்தியா வாக்களித்ததால், அந்த நாட்டின் மீது கோபம் ஏதும் இல்லை. இரு நாட்டு உறவு என்பது, பல பரிமாணங்களை கொண்டது. எனவே, இந்த விஷயத்தை மறந்து விட்டு, அடுத்த கட்ட நடவடிக்கையை கவனிக்க வேண்டும். பாரதிய ஜனதா கட்சி தலைவர் சுஷ்மா சுவராஜ் தலைமையில், ஒரு குழு இலங்கை வருகிறது. இது, இந்தியாவுடன் உள்ள உறவின் ஒரு அங்கத்தின் வெளிபாடு தான்” என்றார்.

TAGS: