இலங்கை இராணுவத்தைச் சேர்ந்த 2500 படையினர் கைது!

இலங்கையில் 2009-ஆம் ஆண்டு இடம்பெற்ற இறுதிக் கட்டப் போருக்கு பின்னரும் அதற்கு முந்தைய காலப்பகுதியிலும் இலங்கை இராணுவத்தைவிட்டு தப்பிச் சென்ற 2500 படைச் சிப்பாய்கள்  இவ்வாண்டு வரை கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கை இராணுவத்தின் ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் ருவான் வணிகசூரிய தெரிவித்துள்ளார்.

சுமார் 65000 சிப்பாங்கள் இராணுவத்தில் இருந்து தப்பிச் சென்றுள்ளதாக குறிப்பிட்ட ருவான் வணிகசூரிய அவர்களில் 36000 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

இவர்கள் தொடர்பில் ஒழுக்க நடவடிக்கை எடுத்து சிலர் மீண்டும் சேவையில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளதோடு, மேலும் சிலர் சட்ட ரீதியாக ஓய்வு பெற்றதாக இராணுவ ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

எதிர்வரும் காலங்களிலும் இராணுவத்தில் இருந்து தப்பியோடிய படைவீரர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் கூறினார்.

TAGS: