இறுதிப் போரின் போது தஞ்சம் அடைந்த 1 1/2 லட்சம் ஈழத் தமிழர்கள் கதி என்ன?

ஈழத் தமிழர்கள் மீது இலங்கை அரசு மேற்கொண்டது இனப் படுகொலையே எனும் குரல்கள் வலுத்துவருகிறது. 2008-ம் ஆண்டு கிளிநொச்சி, முல்லைத் தீவில் எடுக்கப்பட்ட மக்கள் தொகை புள்ளி விவரத்துக்கும், இலங்கை அரசாங்கத்தினால் வெளியிடப்பட்ட 2009-ம் ஆண்டு வன்னிப் போரில் இருந்து வெளியேறியவர்களின் மக்கள் தொகை புள்ளி விவரத்துக்கும் இடையில் காணப்பட்ட இடைவெளி வித்தியாசத்தினை அடிப்படையாக வைத்து 1,46,679 தமிழர்களின் நிலை என்ன ஆனது என்ற கேள்வி எழுந்துள்ளது.

இந்நிலையில் இவ்விவகாரம் குறித்து இலங்கை மீது பல சர்வதேச நாடுகள் கேள்வி எழுப்பியுள்ளன. ராஜப்பு ஜோசப்பு என்பவர் தகுந்த ஆவணங்களுடன் முன்வைத்த இவ்விஷயம் பல சர்வதேச மனித உரிமை அமைப்புக்களின் கவனத் தினைப் பெற்றிருந்ததோடு, பல நாடுகள் இது தொடர்பாக தங்களது கருத்துக்களை வெளியிட்டிருந்தன. இதேவேளை ஐ.நா. நிபுணர் குழுவின் அறிக்கையில், 2009-ம் ஆண்டில் 5 மாதங்களில் மட்டும் 40 ஆயிரம் தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டதாக குறிப்பிடப்பட்டிருந்தது.

TAGS: