ஈழத்தமிழர்களின் அரசியல் போராட்டத்தில் ஜேர்மன் இளையோர்கள்

தமிழீழ விடுதலை போராட்டம் குறித்தும் சிங்கள அரசு மேற்கொண்ட இனப்படுகொலை குறித்தும் ஜேர்மன் இளைஞர்கள் மத்தியில் கடந்த சில மாதங்களாக  பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டுவருகிறது.

ஜேர்மன் தமிழ் இளையோர் அமைப்பை சார்ந்த செல்வன் ஈழவேந்தன், தனது பல்கலைக்கழகத்தில் சக உயர்கல்வி மாணவர்களுக்கான சந்திப்பில் ஈழத்தமிழர்களின் வரலாற்று ரீதியான தகவல்கள் மற்றும் சிங்கள இனவெறி அரசு நடத்திய இனப்படுகொலை குறித்தும் கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டார். அந் நிகழ்வில் கலந்து கொண்ட ஜேர்மனிய பல்கலைகடகழக மாணவர்கள் மிக ஆவலுடன் இவ் விடயங்களை அறிந்துகொண்டனர்.

முள்ளிவாய்க்கால் 3-ஆம் ஆண்டு நினைவு நாள் நெருங்கிவரும் இவ்வேளையில் ஜேர்மனி வாழ் தமிழ் இளையோர்களால் இலங்கை அரசின் போர்க்குற்றம் குறித்த பிரச்சாரங்கள் பரவலாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

இதனிடையே, பதினைந்து வயது கொண்ட செல்வன் அருண், தனது பள்ளியில் ஓர் வேலைத்திட்டமாக இலங்கை மனிதவுரிமை மீறல்கள் என்ற தலைப்பில் இலங்கையில் கொலைக்களம் காணொளியை ஜேர்மன் மொழியில் மொழிபெயர்க்கும் வேலைத்திட்டத்தில் இறங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

TAGS: