ராஜபக்சேவுடனான பேச்சுக் குறித்து ரணில் சம்பந்தனுக்கு விளக்கம்

மகிந்த ராஜபக்சேவுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகளின் விபரங்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனிடம் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெளிவுபடுத்தியுள்ளதாக தெரியவருகிறது.

இந்தியா மற்றும் அமெரிக்காவின் அழுத்தங்களே இலங்கை அரசாங்கத்தின் அரசியல் மாற்றத்திற்கு காரணமாகுமென்றும் சம்பந்தனிடம் ரணில் சுட்டிக் காட்டியதாக கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றிய எதிர்கட்சி பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க எம்.பி. இதனைத் தெரிவித்தார்.

மகிந்த ராஜபக்சேவின் அழைப்பை ஏற்று கடந்த திங்கட்கிழமை ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான குழுவினர் அவரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

இப் பேச்சுவார்த்தைகளில் பேசப்பட்ட விடயங்கள் தொடர்பில் நேற்று திங்கட்கிழமை மாலை எதிர்க்கட்சித் தலைவர் பணிமனையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனை சந்தித்து ரணில் விக்கிரமசிங்க தெளிவுபடுத்தினார் என திஸ்ஸ அத்தநாயக்க மேலும் கூறினார்.

இவ்விடயம் தொடர்பில் கூட்டமைப்பினருடன் பேச்சுவார்த்தைகள் நடத்தி தமது நிலைப்பாடு தொடர்பாக முடிவை அறிவிப்பதாக சம்பந்தன் எம்.பி தெரிவித்துள்ளார்.

TAGS: