இலங்கையில் கடந்த 2009-ஆம் ஆண்டு இடம்பெற்ற இறுதிக் கட்டப் போரில் 40 ஆயிரத்திற்கும் அதிகமான தமிழர்களை இலங்கை இராணுவம் இனப்படுகொலை செய்தது.
முள்ளிவாய்க்காலில் இலங்கை இராணுவத் தாக்குதலில் ஈழத்தமிழர்கள் படுகொலை செய்யப்பட்ட விவகாரத்தில் நீதிகேட்டும் இனப்படுகொலை செய்யப்பட்ட மக்களை நினைவுகூரவும் உலகம் முழுமையும் உள்ள தமிழர்கள் முள்ளிவாய்க்கால் நினைவு நாளை மே 18 ஆம் தேதி கடைப்பிடிக்கின்றனர்.
முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் மூன்றாம் ஆண்டு நினைவு நாள் நேற்று உலகின் பல பாகங்களிலுள்ள தமிழர்கள் உணர்வுடன் அனுஷ்டித்துள்ளனர்.
முள்ளிவாய்க்கால் நினைவு நாளை முன்னிட்டு நாடுகடந்த தமிழீழ அரசின் பிரதமர் வி. உருத்திரகுமாரன் ஆற்றிய உரையை செம்பருத்தி இணையத்தளம் வாசகர்களுக்காக வெளியீடு செய்கிறது.