மன்மோகன் சிங்கைச் சந்தித்தார் மகிந்த ராஜபக்சே!

இந்தியப் தலைமையமைச்சர் மன்மோகன் சிங்கை, இலங்கை குடியரசுத் தலைவரும் போர்க்குற்றவாளியுமான மகிந்த ராஜபக்சே நேற்றுச் சந்தித்துப் பேசியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மெக்சிகோவின் லொஸ் காபோஸ் நகரில் நடைபெறும் ‘ஜி 20’ மாநாட்டின் பக்க நிகழ்வாகவே இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இந்தச் சந்திப்பில் இந்தியப் பிரதமரின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனனும் உடனிருந்தார்.

எனினும் இந்தச் சந்திப்பில் பேசப்பட்ட விடயங்கள் தொடர்பாக எந்தத் தகவலும் வெளியாகவில்லை.

TAGS: