சீனப் பாதுகாப்பு அமைச்சர் தலைமையிலான குழு இலங்கையில்… இந்தியாவுக்கு ஆப்பு?

சீனப் பாதுகாப்பு அமைச்சர் லியாங் குவாங்லி உட்பட சீன மக்கள் இராணுவ உயர் மட்ட அதிகாரிகள் குழு ஒன்று அதிகாரப்பூர்வமான பயணமொன்றை மேற்கொண்டு இலங்கை சென்றுள்ளது.

இலங்கை படையினருக்கான தொழில்சார் பயிற்சிகள் மற்றும் இலங்கையின் கோரிக்கையின் பேரில் இராணுவ உதவிகளை ஊக்குவித்தல் தொடர்பான கலந்துரையாடல்களிலும் அவர் பங்குபற்றுவார் என தெரிவிக்கப்படுகிறது.

இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சே, அந்நாட்டு பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சே மற்றும் இராணுவத் தளபதி லெப்ணல் ஜனரல் ஜெகத் ஜெயசூரிய ஆகியோரையும் அவர் சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.

இலங்கை இராணுவத் தளபதி கடந்த ஆண்டு சீனாவுக்கு பயணம் மேற்கொண்டிருந்ததைத் தொடர்ந்து சீனப் பாதுகாப்பு அமைச்சர் உட்பட சீனாவின் உயர்மட்ட பாதுகாப்பு அதிகாரிகள் இலங்கைக்கு சென்றுள்ளனர்.

இலங்கை பாதுகாப்பு சேவைகள் கல்லூரிக்கு சீன பாதுகாப்பு அமைச்சர் , 1.5 மில்லியன் அமெரிக்க டாலர் நிதி உதவியை வழங்கியுள்ளதாக தகவல் ஒன்று கூறுகிறது. மேலும், இலங்கையின் சப்புகஸ்கந்த பாதுகாப்பு கல்லூரி, பனா கொட இராணுவ முகாம் ஆகியவற்றுக்கும் அவர் செல்லவுள்ளார்.

TAGS: