விரக்தி அதிகரிக்க அதிகரிக்க மலேசியாகினி மீது குறி வைக்கப்படுகிறது

“பிஎன் அரசாங்கம் மிகவும் விரக்தி அடைந்துள்ளதால் பொதுத் தேர்தலுக்கு முன்னதாக நியாயமற்ற முறையில் மலேசியாகினி மீது மீண்டும் குறி வைக்கப்படுகின்றது.”

மலேசியாகினி மீது மீண்டும் தாக்குதல்கள்

சின்ன அரக்கன்: மலேசியாகினி உரிமை, அந்தச் செய்தி இணையத் தளம் நிர்வகிக்கப்படும் முறை, அதனை ஏன் பிஎன் அரசாங்கம் தாக்குகிறது போன்ற விவரங்களை வெளியிட்டுள்ள அதன் தலைமை நிர்வாக அதிகாரி பிரமேஷ் சந்திரனுடைய துணிச்சலைப் பாராட்ட வேண்டும்.

ஒருவர் உண்மையைப் பேசும் போது மறைப்பதற்கு எதுவுமில்லை என்பதையே அவரது கட்டுரை காட்டுகின்றது. இந்த நாட்டில் உள்ள முக்கிய நாளேடுகள் பல ஆண்டுகளாக தங்கள் கௌரவத்தை தங்கள் அரசியல் எஜமானர்களிடம் ‘விற்று’ வருகின்றன. நேர்மையான மரியாதைக்குரிய இதழியல் முறை என்பதே அவற்றிடம் கிடையாது.

அந்தப் பத்திரிக்கைகள் தாங்கள் பெரியவை, கவர்ச்சிகரமானவை, தொழில்நுட்ப ரீதியில் முன்னேறியவை எனத் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாம். ஆனால் அவற்றின் உண்மையான பலம் விற்கப்படும் பிரதிகள் எண்ணிக்கையைச் சார்ந்திருக்கவில்லை. மாறாக வாசகர் வலிமையைப் பொறுத்துள்ளது.

உண்மையைப் பேசுவதற்கு தொழில் நேர்மையும் துணிச்சலும் தேவை. நாடு ஏற்றம் காண உதவும் மனப்பாங்கும் வேண்டும். ‘குரல் இல்லாத’ மலேசியர்களுக்கு ‘குரலாக’ மலேசியாகினி தொடர்ந்து ஒலிக்கும் என பிரமேஷ் கட்டுரை மறு வாக்குறுதி அளித்துள்ளது.

பெர்ட் தான்: பிஎன் அரசாங்கம் மிகவும் விரக்தி அடைந்துள்ளதால் பொதுத் தேர்தலுக்கு முன்னதாக நியாயமற்ற முறையில் மலேசியாகினி மீது மீண்டும் குறி வைக்கப்படுகின்றது.

முக்கிய நாளேடுகளில் வாய்ப்புக் கிடைக்காத குரல் இல்லாதவர்களுக்கு குரல் கொடுப்பதே மலேசியாகினியின் நோக்கம் என அந்த இணைய ஊடகம் வாக்குறுதி அளித்துள்ளது என்னைக் கவர்ந்துள்ளது.

பிஎன் அரசாங்கத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து வரும் மலேசியர்களுக்கும் சிவில் சமூக அமைப்புக்களுக்கும் அந்த ஊடகத்தில் நியாயமான இடம் கிடைக்கின்றது.

அரசாங்கம் மலேசியாகினி மீது எத்தகைய குற்றச்சாட்டுக்களை சுமத்தினாலும் இறுதி முடிவு செய்யப் போவது சந்தாதாரர்களாகிய நாங்களே.

நாங்கள் இதனை உரத்த குரலில் தெளிவாகச் சொல்கிறோம்- மலேசியாகினி நீங்கள் நல்ல வேலை செய்து கொண்டிருக்கிறீர்கள். உங்கள் ஆசிரியர்களுக்கும் நிருபர்களுக்கும் ஆதரவு ஊழியர்களுக்கும் நாங்கள் நன்றி கூறுகிறோம்.

மலேசியாகினி எங்களில் ஒரு பகுதி என நாங்கள் கருதுகிறோம். அதனால் எப்போதும் உங்களை ஆதரிப்போம்.

காவலன்: நேரடியான, உண்மையான செய்திகளை வெளியிடுவதற்காக பிரமேஷ்-க்கும் மலேசியாகினிக்கும் நன்றி.

நான் ஊடக பித்தந் பத்திரிக்கைகளைப் படிக்காமல் நான் காலையில் வீட்டை விட்டு புறப்படுவதில்லை. ஆனால் இப்போது நான் அரசாங்கக் கட்டுப்பாட்டில் உள்ள மலேசிய அச்சு ஊடகங்களைக் கைவிட்டு விட்டேன். செய்திகளுக்கு முக்கிய ஆதாரமாக நான் இப்போது மலேசியாகினியை மட்டுமே வாசிக்கிறேன்.

அடையாளம் இல்லாதவன்_5fb: ஒவ்வொருவரும் அன்றாடம் ஒரு ரிங்கிட்டை மலேசியாகினிக்கு நன்கொடையாக வழங்க வேண்டும். நான் அதனைச் செய்யத் தயாராக இருக்கிறேன். பிரமேஷ் சந்திரன், தலைமை ஆசிரியர் ஸ்டீவன் கான், மலேசியாகினி குழுவினர் மிகவும் நல்ல பணியைச் செய்து கொண்டிருக்கின்றனர்.

பக்காத்தான் ராக்யாட் புத்ராஜெயாவைக் கைப்பற்றிய பின்னர் அரசியல் கட்சிகளும் அவற்றின் தலைவர்களும் பத்திரிக்கைகளையும் தொலைக்காட்சி நிலையங்களையும் சொந்தமாக வைத்திருக்கக் கூடாது எனச் சட்டம் இயற்ற வேண்டும்.

அம்னோவும் மசீச-வும் உண்மையானதாக இருந்தால் உத்துசான், பெரித்தா ஹரியான், தி ஸ்டார், நியூ ஸ்ட்ரெயிட்ஸ் டைம்ஸ், மீடியா பிரிமா ஆகியவற்றில் உள்ள தங்கள் முதலீட்டுப் பங்குகளை விற்று விட வேண்டும்.

OCL123: மலேசியாகினியை படிக்கும் வரையில் பிஎன் இவ்வளவு ஊழலானது என்பது எனக்குத் தெரியாது. நல்ல பணியைத் தொடருங்கள்.

சுவர்க் கண்ணாடி: ஏன் நானும் ஆயிரக்கணக்கான மக்களும் மலேசியாகினியை நாடுகிறோம் ? முக்கிய நாளேடுகள் மறைக்கும் அல்லது திசை திருப்பும் விஷயங்களை அறிந்து கொள்வதற்குத் தான்.

இந்தக் கட்டுரையில் மலேசியாகினி வெளிப்படையாக தெளிவாக விவரங்களை வெளியிட்டுள்ளது.

சுதந்திரமான ஊடகங்களை மேம்படுத்துவதே அவற்றின் நோக்கம். ஆகவே அதில் என்ன பிரச்னை ?

இஸானா: மலேசியாகினி காரணமாக அதிகம் அதிகமான மலேசியர்கள் உண்மையை உணரத் தொடங்கியுள்ளனர். முக்கிய நாளேடுகளைக் கைகழுவுகின்றனர்.

ரோஸ்12358: மலேசியாவில் மலேசியாகினி மட்டுமே சுதந்திரமான, நேர்மையான, உண்மையான ஊடக அமைப்பு என்பதை மக்கள் இப்போது அறிந்துள்ளனர். அதனால் தங்கள் தவறுகள் வெளிச்சத்துக்கு வந்து விடுமோ என அஞ்சும் சில தலைவர்கள் மலேசியாகினிக்கு பிரச்னையை ஏற்படுத்த முயலுகின்றனர்.

லின்: நமது நாட்டுக்கு நல்ல சேவை ஆற்றி வரும் மலேசியாகினிக்கு மிக்க நன்றி. மலேசியாகினி இல்லாவிட்டால் நமது அரசியல்வாதிகளின் அத்துமீறல்கள் பற்றி எதுவும் தெரியாமல் போயிருக்கும். அரசியல் களத்தில் இரு பக்கமும் உள்ள அரசியல்வாதிகள் கவனமாக செயல்படுவதற்கு மலேசியாகினி வழி வகுத்துள்ளது.

அபாசிர்: மூன்றாவது உலக அரசியலில் தலைவர்கள் என்ற போர்வையில் உலவும் சுயநலவாதிகளுக்கு எதிரான மக்கள் போராட்ட வரலாறு எழுதப்படும் போது இந்த நாட்டில் அதற்கு மலேசியாகினி முக்கியப் பங்காற்றியது என நிச்சயம் அங்கீகரிக்கப்படும்.

டுரியோ ஸ்பெந்தினுஸ்: உண்மையில் மலேசியாகினி, மலேசியாவில் ஒரு வெற்றிக் கதை. அதனை உலகம் அறியும். அம்னோவைத் தவிர.

 

TAGS: