மாவீரர் நாட்களில் இசை நிகழ்ச்சியா? இளைய ராஜாவுக்கு எதிராக கனடாவில் ஆர்ப்பாட்டம்

கனடாவில் நவம்பர் மாதம் இசையமைப்பாளர் இளைய ராஜாவின் இசை கச்சேரி நடைபெறவுள்ளது. இதில் முன்னணி பாடகர்கள் பங்கேற்று திரையிசைப் பாடல்களை பாட உள்ளனர்.

இந்த நிகழ்ச்சி நிரல் பற்றி அதிகாரபூர்வமாக பத்திரிகையாளர்களிடம் அறிவிப்பதற்காக இளைய ராஜா கனடா சென்றார். டோரான்டோ நகரில் பத்திரிகையாளர்களை அவர் சந்திப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இளையராஜா நேற்றுமுன்தினம் பகல் 11 மணிக்கு அங்கு சென்ற போது இலங்கை தமிழர்களும் நாம் தமிழர் கட்சியினரும் நூற்றுக்கணக்கில் திரண்டு நடைபெறவுள்ள இசைநிகழ்சிக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

நவம்பர் மாதம் விடுதலைப் புலிகளின் மாவீரர்களின் நினைவு நாட்கள் ஆண்டுதோறும் கடை பிடிக்கப்படுகிறது. அந்த மாதம் முழுவதும் மகிழச்சியான நிகழ்ச்சிகள் எதுவும் நடத்தப்படுவது இல்லை. எனவே இளையராஜாவின் இசை நிகழ்ச்சியை நடத்தக் கூடாது என அங்கு குழுமியிருந்த தமிழ் உணர்வாளர்கள் கோஷம் போட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

நீண்ட நேரம் தமிழர்கள் அங்கு முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தியதால் இளையராஜாவை விழாக் ஏற்பாட்டுக் குழுவினர் பாதுகாப்பாக வெளியேற்றினர்.

TAGS: