முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிவதற்கு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். பள்ளி மாணவிகள் தலையை மறைக்க ஹிஜாப் அணிந்து பள்ளிக்கு வருவது கூடாது என அவர் தெரிவித்துள்ளார்.
ரஷ்யாவில் மொத்த சனத்தொகையில் 15 கோடி மக்களில், இரண்டு கோடி பேர் முஸ்லிம்கள் ஆவர். செசன்யா, வடக்கு காகசஸ், டடார்ஸ்டான் ஆகிய மாகாணங்களில் அதிகளவு முஸ்லிம்கள் வசிக்கின்றனர்.
இங்கு பள்ளிகளில் கல்வி பயிலும் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிந்து வருகின்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் பள்ளி அதிபர்களும் அச்சுறுத்தப்படுகின்றனர்.
இது குறித்து ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் கூறுகையில்; “ரஷ்யா மதசார்பற்ற நாடு. அனைத்து குடிமக்களிடையே சமத்துவம் கடைபிடிக்கப்படுகிறது. இதே சட்டதிட்டங்களைதான் பள்ளிகளிலும் கடைபிடிக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.