இலங்கையில் 2009-ஆம் ஆண்டு இடம் பெற்ற இறுதிக்கட்டப் போர் குறித்து ஐக்கிய நாடுகள் சபையின் இரகசிய அறிக்கையில் பல பகுதிகள் கறுப்பு மையினால் அழிக்கப் பட்டுள்ளதாக தெரியவருகிறது.
பிபிசிக்கு கசிந்ததாகக் கூறப்படும் இறுதிக் கட்டப் போரின்போது தமிழர்களைப் பாதுகாக்க ஐ.நா மன்றம் தவறியது குறித்து அறிக்கையை ஐ.நா பொதுச் செயலாளர் பான் கீ மூன் நேற்று முன்தினம் பகிரங்கமாக வெளியிட்டுள்ளார்.
128 பக்கங்களைக் கொண்ட இந்த இரக சிய அறிக்கையில் பல பகுதிகள் கறுப்பு மை யினால் அழிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. எனினும் போரின்போது இலங்கை அரசாங்கத்தினால் தமிழர்களுக்கு ஏற்பட்ட இழப்புகள், ஐ.நா தனது பொறுப்பிலிருந்து தவறியது குறித்த விடயங்கள் உள்ளடக்கப் பட்டுள்ளன.
மேலும் போர் வலயத்தில் சிக்குண்ட பொதுமக்களைப் பாதுகாக்க ஐ.நா உயர்மட்ட அதிகாரிகள் தலையிடவில்லை என்றும் இலங்கை அரசினால் மிகமோசமாக மேற்கொள்ளப்பட்ட படுகொலைகள் குறித்த தகவல்களையும் ஐ.நா வெளியிடவில்லை.
இலங்கை அரசாங்கத்திற்கு பயந்து இவ்வாறான தகவல்களை ஐ.நா அதிகாரிகள் வெளியிடவில்லை எனவும் அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வறிக்கையில் கறுப்பு மையினால் அழிக்கப்பட்ட தகவல்கள் மிகவும் முக்கியமானவையாக இருக் க் கூடும் எனவும் இந்த விடயத்திலும் ஐ.நா தவறிழைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.